Thursday, July 22, 2010

சும்மா கொளுத்தி போடு அம்மோவ்!...

“நீங்கள் எதிர்ப்பார்க்கும் கூட்டணி அமையும்” என்று கோவையில் தனது கட்சியினர் பிரம்மாண்டமாகக் ‘கூட்டிய’க் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியது அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகத்தில் மிதக்கவிட்டது மட்டுமின்றி, ஆளும் தி.மு.க. உட்பட பல கட்சிகளின் தலைவர்களை கூட்டணி தொடர்பாக பலமாகச் சிந்திக்கவும் வைத்துள்ளது. திருவாளர் பொதுஜனமும் கூட்டணி எப்படி அமையுமாம் என்று தன் பங்கிற்கு கையில் ஒரு சொத்தை வாக்கை வைத்துக் கொண்டு மற்றவர்களுடன் விவாதித்து வருகிறார்.

‘சும்மா கொளுத்தி போடு’ என்பது போலத்தான் ‘நீங்கள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமையும்’ என்று ஜெயலலிதா கூறியது. ஆனாலும் அவர் கூறிய வார்த்தைகள் அரசியல் தலைவர்களையும், அரசியல் நோக்கர்களையும், பத்திரிக்கையாளர்களையும் சுறுசுறுப்பாக்கியுள்ளது என்பது மட்டும் நிதர்சனமாகத் தெரிகிறது.

ஆளும் கட்சியான தி.மு.க.தான் இதில் பெரிதும் அச்சமுற்றிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனெனில் அவர்களின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இன்றளவில் காங்கிரஸை விட்டால் வேறு நாதியில்லை என்ற நிலை. தமிழக சட்டப் பேரவையில் 100 உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் அடுத்த ஓராண்டிற்கு கதை ஓடாது என்பதை அக்கட்சியின் தலைமை நன்கு புரிந்துகொண்டுள்ள காரணத்தினால்தான், கிடைக்கிற மேடைகளில் பேசுகிற காங்கிரஸ் கட்சியின் தமிழகத் ‘தலைவர்கள்’ ஏகத்திற்கு ஏகடியம் பேசியும் தி.மு.க. தலைமை வாயைப் பொத்திக்கொண்டு அமைதி காக்கிறது என்கிறார்கள். அந்த அளவிற்கு கூட்டணி அழுத்தத்தில் இருக்கிறது ஆளும் கட்சியான தி.மு.க.

தி.மு.க.விற்கு அளித்துவரும் ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக்கொண்டால், அடுத்த சட்டப் பேரவைத் தேர்தல் வரும் வரை அந்தக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளிக்கக் கூட அ.இ.அ.தி.மு.க. தயாராக இருக்கிறது என்ற பேச்சு டெல்லி வட்டாரத்தில் ஓராண்டிற்கு முன்னரே வலம் வந்தது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு நல்கிட பாட்டாளி மக்கள் கட்சியும் தாயாராக இருந்தது என்றும் கூறப்பட்டது.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி சாத்தியமா?

‘நீங்கள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமையும்’ என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியதன் பொருள் என்ன? இது அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை எழுந்துள்ள கேள்வியாகும். கூட்டணியில்லாமல் ஆட்சியில்லை என்பதை ஜெயலலிதாவைப் போல அக்கட்சியின் தொண்டர்களும் நன்குணர்ந்துள்ளதால், அந்தக் கூட்டணி யாருடன் என்பதற்கு விடை தேட அவர்களும் தங்கள் பங்கிற்கு விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.


அந்தக் கூட்டணிக் கட்சி எது? காங்கிரஸா அல்லது ஆரம்பித்த 5 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுப் பலம் வாய்ந்த மூன்றாவது அரசியல் கட்சியாக வளர்ந்துள்ள விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிட கழகமா? இந்த இரண்டில் எதோடு கூட்டணி அமைந்தாலும் அது வெற்றிக் கூட்டணிதான் என்பது அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் கருத்து.

அ.இ.அ.தி.மு.க.விற்கும் தே.மு.தி.க.விற்கும் இடையே கூட்டணி குறித்து தொடர்ந்து பல்வேறு ‘தொடர்பு’களின் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருவதை ஊடுருவிச் செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களும், அதே அளவிற்கு ‘தொடர்பு’களைக் கொண்ட அரசியல் நோக்கர்களும் நன்கு அறிவர். ஆனால் இவ்விரு கட்சிகளும் கூட்டணிக்கு வரும் சாத்தியம் மிக மிகக் குறைவு என்றே இரு தரப்பினரும் கருதுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் ஒரே காரணம்: ஜெயலலிதா, விஜயகாந்த் இருவருமே பிடிவாத குணம் கொண்டவர்கள் என்பதுதான். நான்தான் முதலமைச்சர் என்பதில் விஜயகாந்தின் பிடிவாதம் இக்கூட்டணித் தொடர்பான பேச்சுகளை முதற்கட்டத்தைத் தாண்டி நகர்த்த முடியாமல் தடுக்கிறது. இது முன்பிருந்த நிலை.

இப்போது விஜயகாந்தின் நிலை சற்று தளர்ந்துள்ளதாகவும் அந்தத் ‘தொடர்’புகள் கூறுகின்றன. வெற்றிக்குத் தேவை கூட்டணி என்பதை அவர் உணர்ந்துள்ளார். ஆனால் கணிசமான தொகுதிகளை தே.மு.தி.க.விற்கு வழங்க வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடிப்படையாக அவர்கள் கூறுவது: நாங்கள் சேரும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும் என்பது. அதற்கு விலை? குறைந்தது 100 தொகுதிகள்! இந்தப் பேரமும் முதற்கட்டத்தை தாண்டி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியாமல் தடுத்துவிடுகிறதாம். ஆனால், தே.மு.தி.க. கட்சி வட்டாரங்கள் இதனை நியாயமான பேரம் என்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம்: கூட்டணி அமைந்தால் 50 முதல் 60 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெரும் அளவிற்கு கட்சி + வேட்பாளர் பலம் தே.மு.தி.க.விற்கு உள்ளது. கூட்டணி பலத்தில் மேலும் 40 தொகுதிகள் என்பது எட்டாக்கனியல்ல, ஆகவே தங்கள் தலைவர் விஜயகாந்தின் பேரம் நியாயமானதே என்று கூறுகின்றனர்.


இதில் அ.இ.அ.தி.மு.க. கணக்கு என்ன? என்றறிய சுற்றிவந்தபோது கிடைத்த பதில்: அதிகபட்சமாக 60 முதல் 70 தொகுதிகள். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் இல்லாத நிலையில் தே.மு.தி.க.வுடனான கூட்டணி நிச்சயம் தன்னை ஆட்சியில் அமர்த்திவிடும் என்பதில் உறுதியாக உள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தே.மு.தி.க.விற்கு 70 இடங்கள் கொடுத்தாலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மறுமலர்ச்சி தி.மு.க. ஆகியவற்றிற்கு 25 முதல் 30 தொகுதிகளை பகிர்ந்தளித்துவிட்டு, மீதமுள்ள 130 முதல் 135 தொகுதிகளில் போட்டியிட்டாலும், பலமான கூட்டணி அமைவதால் பெரும்பான்மை கூட சாத்தியமே என்று அ.இ.அ.தி.மு.க. தலைமை கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது. இது 2001ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டிய கணக்காகும். அந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று மெகா கூட்டணி அமைத்த அ.இ.அ.தி.மு.க. 142 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால் 133 (ஒரு சுயேட்சையின் ஆதரவையும் சேர்த்து) இடங்களில் வெற்றி பெற்று அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அந்தக் கணக்கே இப்போதும் ஓடுவதாக கூறப்படுகிறது.

இந்த அளவிற்கு தே.மு.தி.க.விற்கு முக்கியத்துவம் அளித்து அ.இ.அ.தி.மு.க. தலைமை சிந்திப்பதற்குக் காரணம், தி.மு.க.வை கழற்றி விட்டுவிட்டு தங்கள் பக்கம் காங்கிரஸ் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு என்பதே.

ஆனால் 60 முதல் 70 இடங்களுக்கு தே.மு.தி.க. ஒப்புக்கொள்ளுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் இக்கட்டுரை வெளியாகும் இந்த நேரத்திலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. ஆயினும் இன்று நேற்றல்ல, கடந்த ஆண்டு முதலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜயகாந்தை ‘தங்கள்’ கூட்டணிக்குள் இழுக்க ‘பாகீரத பிரயர்தனம்’ செய்து வருவது அரசியல் வட்டாரங்கள் நன்கு அறிந்த இரகசியமாகும்.

தி.மு.க.வை கழற்றி விடுமா காங்கிரஸ்?

இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் சிந்திக்கத்தக்கவை:


1) மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 200 இடங்களே உள்ள நிலையில், அதன் இரண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு முக்கியமானது. ஒன்று 19 இடங்களைக் கொண்ட திருணாமுல் காங்கிரஸின் ஆதரவு, மற்றொன்று தி.மு.க.வின் 19 (18 + திருமாவளவன்) ஆதரவு.

2) இதில் திருணாமுல் காங்கிரஸ் உறவு அந்த அளவிற்கு பலமானதாக இல்லை (இன்று அந்த நிலை மாறியுள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக மம்தா அறிவித்துள்ளார்), ஆனால் தி.மு.க.ஆதரவு நிச்சயமானதாக உள்ளது. அதனால்தான் ஸ்பெக்டரம் ஊழல் குற்றச்சாற்று பெரிதாக எழுந்த நிலையிலும் அது தி.மு.க. உறவை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. அமைச்சர் இராசா மீது நடவடிக்கை எதையும் எடுக்காமல் தவிர்த்தது.

3) தி.மு.க.வை விட்டுவிட்டு அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் 9 மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே கிடைக்கும். அதுமட்டுமின்றி, தி.மு.க. அளவிற்கு அ.இ.அ.தி.மு.க. உறவு நம்பத்தக்கதாக காங்கிரஸ் தலைமை நினைக்கவில்லை.

4) சரத் பவாரின் தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விட தி.மு.க.வின் ஆதரவு உறுதியானது என்பதும், மத்தியில் இன்னமும் 4 ஆண்டுகளுக்கு ஆட்சிக்காலம் இருப்பதால், தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தேர்தலிற்காக மத்திய ஆட்சியின் பலத்தை ஆபத்திற்குள்ளாக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை.

5) தே.மு.தி.க.வை ‘எப்படியாவது’ தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி கண்ணும் கருத்துமாக உள்ளது. ஆனால் அதற்காக அது தி.மு.க.வை கழற்றிவிடத் தயாரில்லை. தே.மு.தி.க. கூட்டணிக்குள் வருவதை தி.மு.க. தலைவரும் விரும்புகிறார். அந்தப் பக்கம் போவதை விட நம்ம பக்கம் வைத்துக்கொண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் முழு வெற்றியை உறுதி செய்துக் கொள்ளலாம் என்பது தி.மு.க. தலைவரின் எண்ணமாக உள்ளது.

ஆக, தி.மு.க.வை கழற்றி விட்டுவிட்டு அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் வாய்ப்பு, இன்றைய நிலையில், முற்றிலும் இல்லை.

தனது முதலமைச்சர் ஆகும் கனவு இலக்கை இப்போதைக்கு மறந்துவிட்டு, சட்டப் பேரவையில் ஒரு பலமான கட்சியாக அமர்வதை முக்கியமானதாக விஜயகாந்த் கருதினால் அ.இ.அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீட்டின் அடிப்படையில் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. இது அவ்வளவு சாதாரணமாக நடந்தேறிவிடாது. கடுமையான பேரம் நடக்கும்.

காங்கிரஸே மாப்பிள்ளை!


ஜெயலலிதா கிளப்பிவிட்ட எதிர்ப்பார்த்த கூட்டணி பேச்சால் பெரும் பயன் அடையப்போவது காங்கிரஸே. ஜெயலலிதா தங்களை வரவேற்கத் தயாராக உள்ளதைக் காட்டி, சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கப் போகும் கட்சி நாங்களே என்று கூறி, தங்களது தொகுதி பேர பலத்தை காங்கிரஸ் கட்சி அதிகரித்துக்கொள்ளும். கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, இப்போது 60 முதல் 70 தொகுதிகளைக் கேட்கும். காங்கிரஸை தனது கூட்டணியில் தக்கவைத்துக்கொள்ள தி.மு.க. தலைமையும் சற்றேறக்குறைய அந்த அளவிற்கு விட்டுத் தரும் வாய்ப்பும் உள்ளது. இந்தத் தொகுதி பேரம் டெல்லியில் விரைவில் நடந்து முடியும். தி.மு.க. + காங்கிரஸ் + பா.ம.க. + விடுதலை சிறுத்தைகள் கூட்டணி உறுதியாகும்.

உள் அரசியல்!

தங்களோடு கூட்டணி அமைத்துக்கொள்ளத் துடிக்கும் தே.மு.தி.க.வை காங்கிரஸ் என்ன செய்யும்? அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிடுமாறு ஆலோசனைக் கூறும் என்றும், தி.மு.க. கூட்டணியில் தாங்கள் பெறும் இடங்களுக்கு இணையாக அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் கணிசமான இடங்களைப் பெற்று போட்டியிட வேண்டும் என்றும் கூறும். சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையற்ற ஒரு நிலையை உண்டாக்கினால், அப்போது இரு கட்சிகளும் இணைந்து, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஒரு கூட்டணி அரசு அமைக்கும் வாய்ப்பு கிட்டலாம், அப்போது... தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் 40 ஆண்டுக்கால கனவு நிறைவேறலாம். காங்கிரஸ் + தே.மு.தி.க. + பா.ம.க. என்ற புதிய அணி தமிழ்நாட்டில் பிறக்கலாம்.

இப்படியும் ஒரு கணக்கு உள்ளது, இங்கும் டெல்லியிலும். இதனை 60 ஆண்டுக்கால அரசியல் முதிர்ச்சி பெற்ற தி.மு.க. தலைமையும் அறிந்தே உள்ளது.

பின்குறிப்பு: மக்கள் நலன், அத்‌தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், தமிழ்நாட்டின் நதி நீர்ப் பிரச்சனைகள், ஈழத் தமிழர் பிரச்சனை என்று மக்கள் மனதை வாட்டும் பிரச்சனைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டணிகள் அமையாதா என்று யாரும் ஏங்க வேண்டாம். இந்தப் பிரச்சனைகளெல்லாம் தேர்தலுக்கானவை அல்ல. தேர்தலிற்குத் தேவை கூட்டும் துட்டும்தான். இரண்டாவதைத்தான் அள்ளித் தருவார்களே... அப்புறமென்ன?

நன்றி: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1007/22/1100722036_1.htm

Friday, April 23, 2010

உயிருக்கு விலைபேசும் ஆய்வகங்கள் :தினமலர்

அடிப்படை வசதியின்றி, தகுதியான லேப் டெக்னீசியன் இன்றி தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும், ரத்தப் பரிசோதனை ஆய்வகங்களை கட்டுப்படுத்த அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரத்தவங்கி துவங்க, மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரக அனுமதி பெறவேண்டும். மருந்து கடை அமைக்க தமிழக மருந்துக்கட்டுப்பாட்டு இயக்குனர் அனுமதி பெறவேண்டும். ஆனால் ரத்தமாதிரியை பரிசோதனை செய்யும் ஆய்வகங்களை வரைமுறை படுத்த எந்தவித நடைமுறையும் இல்லை. சிறுதொழிலுக்கு வழங்கப்படும் சான்றிதழ் மட்டும் பெற்று, யார் வேண்டுமானாலும் ஆய்வகம் துவக்கலாம். அதுவும் உள்ளூரிலேயே இச்சான்றிதழைப் பெறலாம். பெட்டிக்கடை, டீக்கடைக்கும் இச்சான்றிதழ் தான் வழங்கப்படுகிறது. ஒரு மைக்ரோஸ்கோப், சில ரசாயன மருந்துகள், ஒரு சிறிய அறை இருந்தால் கூட உடனடியாக இந்த சிறுதொழிலுக்கான அனுமதி கிடைத்து விடுகிறது.

நிறைய ஆய்வகங்கள் ஒரே அறையில், சிறு கழிப்பறையுடன் செயல்படுகின்றன. லேப் டெக்னீசியனுக்கு படித்தவரா, அனுபவ அறிவு உள்ளதா என்ற அடிப்படை தகுதி கூட ஆய்வகத்துக்கு தேவையில்லை. தரக்கட்டுப்பாடு குறித்து அரசும் கவலைப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பும் இல்லை. கழிவு மேலாண்மையை முறையாக கையாள வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் ரத்த, சிறுநீர் பரிசோதனை செய்பவர்களின் நிலை என்னவாகும்? சிறிய கிளினிக் வைத்துள்ள டாக்டர்கள் கூட, இத்தகைய ஆய்வகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, நோயாளிகளை பரிந்துரை செய்கின்றனர். ரத்த மாதிரியின் உண்மையான ஆய்வு குறித்தும் கேள்விக்குறியாக உள்ளது. தவறாக பகுப்பாய்வு செய்திருந்தால், தவறான சிகிச்சை பெற்ற நோயாளியின் உயிருக்கு உலை வைத்துவிடும்.

சில ஆய்வகங்களில் எக்ஸ்ரே, இ.சி.ஜி., வசதியும் உள்ளது. அதைக் கையாள தகுதியான நபர்களை நியமித்து உள்ளனரா என்பது தெரியவில்லை. ஆய்வகத்தில் இவர்களின் செயல்பாடுகள் போலி மருந்து, காலாவதி மருந்துகளைப் போல, நோயாளிகளின் உயிருக்கு விலை பேசும், ஆய்வகங்களையும் அரசு முறைப்படுத்த வேண்டும். அனைத்து வசதிகளுடன் செயல்படும் ஆய்வகங்களுக்கு தரப்படும் சிறுதொழிலுக்கான சான்றிதழுக்கு பதில் சுகாதாரத்துறையின் முறையான அங்கீகாரம் வழங்கவேண்டும்.

Tuesday, March 23, 2010

கொலை-கொள்ளை ஒழிப்புதினம்!​​ விப​சார ஒழிப்புதினம்!!​ உண்மை பேசும் தினம்!!!

ஊழல் என்​பது உல​க​ளா​விய விஷ​ய​மா​கி​விட்​டது என்​ப​தால் அதை அன்​றாட வாழ்க்​கை​யின் அம்​ச​மா​கவே பெரும்​பா​லோர் ஏற்​றுக்​கொண்டு விட்​ட​தா​கத் தோன்​று​கி​றது.​ ராஜா ராணி காலத்தி​லி​ருந்து ஆட்​சி​யா​ளர்​க​ளுக்கு நெருக்​க​மாக இருந்​த​வர்​கள் அதி​கப்​ப​டி​யான சலு​கை​களை அனு​ப​விப்​பது என்​பது புதிய விஷ​ய​மல்ல.​ அதே​போல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளில் பலர் குடி​மக்​க​ளின் நல​னைப் பற்​றியே கவ​லைப்​ப​டா​மல் சகல சௌ​பாக்​கி​யங்​க​ளு​டன் ராஜ​போ​க​மாக ஊதாரி வாழ்க்கை வாழ்ந்த சரித்​தி​ரம் உல​க​ளா​விய ஒன்று.​ அர​சி​யல் தலை​வர்​க​ளின் ஊழ​லைக்​கூ​டப் புரிந்து கொள்​ள​லாம்.​ தேர்​த​லுக்​குச் செலவு செய்த பணத்தை லஞ்​சம் வாங்கி ஈடு​கட்டி,​​ அடுத்த தேர்​தல்​க​ளுக்​கான பணத்​தைச் சேர்த்து வைக்க முயற்​சிக்​கி​றார்​கள் என்று சமா​தா​னம் சொல்ல முடி​யும்.​ கொள்ளை அடித்​துக் கொள்​ள​வும்,​​ லஞ்​சம் வாங்​கிக் கொள்​ள​வும் மக்​கள் அவர்​க​ளுக்கு வாக்​க​ளித்து அனு​மதி வழங்கி இருக்​கி​றார்​கள் என்று மன​தைத் தேற்​றிக் கொள்​ள​லாம்.​

ஆனால்,​​ மக்​க​ளின் வரிப்​ப​ணத்​தில் சம்​ப​ளம் வாங்​கும் அரசு அதி​கா​ரி​கள்,​​ மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது எந்த விதத்​தில் நியா​யம்?​ வாங்​கும் சம்​ப​ளம் தங்​க​ளது தகு​திக்​கும் திற​மைக்​கும் ஏற்​ற​தாக இல்​லை​யென்​றால் ராஜி​நாமா செய்​து​விட்டு வேறு வேலை பார்த்​துக் கொள்​வ​து​தானே?​ மக்​க​ளாட்​சி​யில் மக்​க​ளுக்​காக உழைப்​ப​தற்​காக மக்​க​ளால் சம்​ப​ளம் கொடுத்து நிய​மிக்​கப்​பட்​டி​ருக்​கும் வேலைக்​கா​ரர்​கள்,​​ மக்​க​ளின் கோரிக்​கையை நிறை​வேற்ற மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது தடுக்​கப்​பட்​டால் ஒழிய,​​ லஞ்​ச​மும் ஊழ​லும் அன்​றாட வாழ்க்​கை​யின் ​ அங்​க​மா​கத் தொடர்​வ​தைத் தடுக்க முடி​யாது.​

ஆட்சி முறை மாறி​யதே தவிர மன்​ன​ராட்​சி​யின் தவ​று​க​ளும் குறை​பா​டு​க​ளும் களை​யப்​பட்​ட​னவா என்று கேட்​டால் உதட்​டைப் பிதுக்க வேண்டி இருக்​கி​றது.​ பரம்​பரை ஆட்​சிக்​குக்​கூட மக்​க​ளாட்​சி​யில் முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாத நிலைமை.​ ஜார் மற்​றும் பதி​னெட்​டாம் லூயி மன்​னர்​க​ளுக்​குப் பதி​லாக ஹிட்​லர்,​​ முசோ​லினி,​​ இடி அமின் என்று சர்​வா​தி​கா​ரி​க​ளும்,​​ மக்​க​ளைப் பற்​றிய கவ​லையே இல்​லா​மல் தங்​க​ளது மனம் போன போக்​கில் நடந்த ஆட்​சி​யா​ளர்​க​ளும் மக்​க​ளாட்​சி​யி​லும் தொடர்​வ​து​தான் வேடிக்கை.​ கடந்த நான்கு ஆண்​டு​க​ளில்,​​ சுமார் 1000 அரசு உயர் அதி​கா​ரி​கள் மற்​றும் ஊழி​யர்​கள்​மீது வழக்​குத் தொட​ரப்​பட்​டி​ருக்​கி​றது.​ இவர்​க​ளில் சிலர் சிறைத் தண்​ட​னை​யும் அனு​ப​வித்​த​வர்​கள்.​ ஆனா​லும் இவர்​க​ளில் ஒன்​றி​ரண்டு கணக்​கர்​க​ளும்,​​ கடை​நிலை ஊழி​யர்​க​ளும் தவிர யாரும் பதவி நீக்​கம் செய்​யப்​ப​ட​வில்லை.​ வழக்​கு​கள் தொட​ரப்​பட்டு நடந்து கொண்​டி​ருக்​கின்​ற​னவே தவிர தீர்ப்பு எழு​தப்​ப​ட​வில்லை.​ இவர்​க​ளைப் பதவி நீக்​கம் செய்ய மேல​தி​கா​ரி​கள் தயா​ரு​மில்லை.​ பிகா​ரில் மட்​டு​மல்ல,​​ இந்​தியா முழு​வ​துமே உள்ள நிலைமை இது​தான்.​

ஆட்​சி​யை​யும் அதி​கா​ரத்​தை​யும் ஒரு சிலர் பரம்​பரை பாத்​தி​யதை கொண்​டாடி வரு​வ​தை​யும்,​​ குடி​மக்​க​ளின் நல்​வாழ்​வைப் பற்​றிய சிந்​த​னையே இல்​லா​மல் ஆட்​சி​யா​ளர்​க​ளும் அவர்​க​ளுக்கு நெருக்​க​மா​ன​வர்​க​ளும் செயல்​பட்டு வரு​வ​தை​யும் பார்த்து மக்​கள் கொதித்து எழுந்​த​தன் விளை​வு​தான் மன்​னர் ஆட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​பட்​ட​தும்,​​ மக்​க​ளாட்சி மலர்ந்​த​தும்.​ நியா​ய​மா​கப் பார்த்​தால் மக்​க​ளாட்​சி​யில் லஞ்​சம்,​​ ஊழல்,​​ அதி​கார துஷ்​பி​ர​யோ​கம்,​​ ஒரு சிலர் தனிச் சலு​கை​கள் பெறு​வது போன்​ற​வற்​றுக்கே இடம் இருக்​க​லா​காது.​ பிகா​ரில் முதல்​வர் நிதீஷ் குமார் பதவி ஏற்​ற​தும் ஊழ​லுக்கு எதி​ரா​கக் கடும் நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டார்.​ லஞ்​சம் வாங்​கும்​போது கையும் கள​வு​மா​கப் பிடி​பட்டு,​​ ​ கைது செய்​யப்​பட்ட 365 அரசு ஊழி​யர்​க​ளில் 300 பேருக்​கும் அதி​க​மா​ன​வர்​கள் கோடீஸ்​வ​ரர்​கள் என்​பது ​ விசா​ர​ணை​யில் தெரிய வந்​தது.​

வளர்ச்சி அடைந்த நாடு​கள்,​​ வளர்ச்சி அடை​யாத நாடு​கள் என்​கிற வேறு​பாடே இல்​லா​மல்,​​ மக்​க​ளாட்சி,​​ சர்​வா​தி​கார ஆட்சி,​​ ராணுவ ஆட்சி என்​றெல்​லாம் வித்​தி​யா​சம் பாரா​மல் எங்​கும் எல்லா இடத்​தும் நீக்​க​மற நிறைந்​தி​ருக்​கும் பரம்​பொ​ருள்​போல லஞ்​ச​மும்,​​ ஊழ​லும்,​​ அதி​கார துஷ்​பி​ர​யோ​க​மும்,​​ தனி​ந​பர் சலு​கை​க​ளும் பரந்து விரிந்​தி​ருப்​பது மனித சமு​தா​யத்​துக்கே களங்​க​மா​க​வும் அவ​மா​ன​மா​க​வும் தொடர்​கி​றது.​

லஞ்ச ஊழ​லைப் பொறுத்​த​வரை ஒரு வேடிக்​கை​யான விஷ​யம் என்​ன​வென்​றால்,​​ இது படித்​த​வர்​க​ளின் தனிச்​சொத்து என்​ப​து​தான்.​ கிரா​மங்​க​ளில் படிக்​காத ஏழை விவ​சா​யியோ,​​ தொழி​லா​ளியோ லஞ்​சம் வாங்​க​வும்,​​ ஊழல் செய்​ய​வும் வாய்ப்பே இல்​லா​த​வர்​கள்.​ அரசு அலு​வ​லர்​க​ளா​னா​லும்,​​ காவல்​து​றை​யி​ன​ரா​னா​லும் அவர்​கள் படித்​த​வர்​கள்.​ அவர்​கள்​தான் லஞ்​சம் வாங்​கு​கி​றார்​கள்.​ அப்​பாவி ஏழை​க​ளும்,​​ படிப்​ப​றி​வில்​லா​த​வர்​க​ளும்,​​ சாமா​னி​யர்​க​ளும்,​​ நடுத்​தர வர்க்​கத்​தி​ன​ரும் இந்​தப் படித்த "கன'வான்​க​ளின் பேரா​சைக்​குத் தீனி போட வேண்​டிய நிர்​பந்​தம்.​ ஐம்​ப​து​க​ளில் உள்​துறை அமைச்​ச​ராக இருந்த குல்​ஜா​ரி​லால் நந்​தா​வில் தொடங்கி எத்​தனை எத்​த​னையோ பிர​த​மர்​க​ளும்,​​ உள்​துறை அமைச்​சர்​க​ளும்,​​ அர​சி​யல் தலை​வர்​க​ளும் ஊழ​லுக்கு எதி​ரா​கப் போரை அறி​வித்து விளம்​ப​ரம் தேடிக் கொண்​டார்​களே தவிர ஊழல் ஒழி​ய​வும் இல்லை.​ ஊழ​லுக்கு எதி​ரான வாய் சவ​டால் குறை​ய​வு​மில்லை.​

உலக ஊழல் ஒழிப்பு தினம் என்று ஆண்​டுக்​கொரு முறை ஊழ​லுக்கு எதி​ரான விழிப்​பு​ணர்வை மக்​கள் மத்​தி​யில் ஏற்​ப​டுத்​து​வது என்​பதே அவ​மா​ன​க​ர​மான விஷ​யம்.​ கொலை கொள்ளை ஒழிப்பு தினம்,​​ விப​சார ஒழிப்பு தினம்,​​ உண்மை பேசும் தினம் என்​றெல்​லாம்​கூட ஏற்​ப​டுமோ என்று பய​மாக இருக்​கி​றது.​

Tuesday, March 16, 2010

தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து...

திராவிட இயக்கங்கள் மக்களின் மகத்தான ஆதரவுடன் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து,​​ இருமொழிக் கொள்கையை இறுகப் பற்றிக்கொண்டு தமிழனின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பயணத்தைத் தொடங்கி 42 ஆண்டுகள் ஆகின்றன. மதராஸ் மாநிலம் என்றைக்கோ தமிழ்நாடாகிவிட்டது,​​ தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டும் ​வருகிறது,​​ திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் வரிச்சலுகையும் தரப்படுகிறது (பாவம், சினிமாக்காரர்கள் ஏழைகள் என்பதால்!),​​ ஐ.ஏ.எஸ். தேர்வைக்கூட தமிழில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.​ தில்லி அதிகார பீடத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கும் சிம்மாசனம் போடப்பட்டுள்ளது -​ இவை அனைத்தும் தமிழனின் உயர்வின் அடையாளம் என்று எண்ணத்தோன்றுவது இயற்கைதான்.

ஆனால் விற்க முடிந்ததையெல்லாம் விற்றுப் பெற்ற கல்வியை வைத்து,​​ மத்திய அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கவே முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவர்கள் என்ற நிலை கடந்த கால் நூற்றாண்டாக நிலவி வருகிறது.​ மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை நிலைப்பாட்டினால் இந்தியாவிலேயே பாதிக்கப்படுகிற ஒரே இனம் இந்தி படிக்காத தமிழினம் என்பதைக் கேட்கும்போது நெஞ்சு பதைக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மொழி உரிமைகளே மறுக்கப்பட்டுவருகின்ற சூழ்நிலையில்,​​ நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு கொடுத்த இந்தி பேசாத மக்கள்மீது அவர்களாக விரும்பிக் கேட்கும்வரை இந்தி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை அவருக்குப்பின் வந்த மத்திய ஆட்சியாளர்களும் பின்பற்றுவர் என்று எண்ணி,​​ தமிழக ஆட்சியாளர்கள் வாளாதிருந்ததால்,​​ அதுவே இப்போது தமிழர்களின் தலைக்குமேல் வாளாகத் தொங்குகிறது.​ ஒருபுறம் இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்குத் தாராள நிதி அளிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு,​​ மறுபுறம் மத்திய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்கும் ஏகாதிபத்திய ஏவல்களை ஓசைப்படாமல் செய்துவருகிறது.

1965-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்ற கேந்திரிய வித்யாலயா என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளிகள் நாடுமுழுவதிலும் 981 இருக்கின்றன.​ இவற்றில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.​ 1986-ம் ஆண்டுவரை இந்தப் பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இந்தி படித்திருக்கவேண்டும் என்று கேட்கப்பட்டதில்லை.​ 1986-ம் ஆண்டுக்குப்பிறகு இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு இந்தி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.​ ​

அதேபோல் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் எனப்படும் மாதிரிப் பள்ளிகள் இந்தியா முழுவதும் 567 இருக்கின்றன.​ மத்திய ஆட்சியாளர்கள் இப்பள்ளிகள் மூலம் மும்மொழிக் கொள்கையை முன்மொழிந்ததால் இவை இதுவரை தமிழ்நாட்டில் வழிமொழியப்படவில்லை.​ இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கும் இந்தி அறிவு கட்டாயத் தேவையாக உள்ளது.​ 1986-ம் ஆண்டு வரை,​​ அதாவது 21 ஆண்டுகள் இந்தி படிக்காத தகுதியான தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இப்பள்ளிகளில் திறம்படப் பணியாற்றி நல்லாசிரியர் விருதுகள்கூடப் பெறமுடிந்தது.​ இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத மத்திய அரசு இந்தியைக் கட்டாயமாக்கி,​​ மெத்தப்படித்த தமிழ் இளைஞர்கள்கூட விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

நடப்பு ஆண்டில் மட்டும் மத்திய அரசின் இந்தப் பள்ளிகளில் 6037 ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.​ ஆனால் படித்த தமிழ் இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலாத திக்கற்றவர்களாக இருக்கின்றனர்.​ கூட்டாட்சித் தத்துவத்துக்கே வேட்டு வைக்கிற மத்திய அரசின் இந்த முடிவால் கடந்த 23 ஆண்டுகளில் பல ஆயிரம் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை.​ ​ ​

மத்திய கல்வித்துறையின் ஒரு பிரிவிலேயே தமிழர்கள் இந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ மத்திய அரசின்கீழ்வரும் மற்ற எந்தெந்தத் துறைகளில் தமிழர்கள் இப்படிப் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே ​ மலைப்பு மேலிடுகிறது.​ இந்தி படிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லுகிற கயமைக்குச் சொந்தக்காரர்களைவிட,​​ இந்தி படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திய மொழிவெறியர்களே மேலானவர்கள் அல்லவா?​ இப்படித் ​ தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவரும் தமிழ் இளைஞர்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக ஆட்சியாளர்கள் யாரும் முதலடிகூட எடுத்துவைக்கவில்லையென்பதுதான் வேதனையின் உச்சம்.​ திராவிட அரசுகள் தொடர்ந்து கடைபிடித்துவரும் இருமொழிக் கொள்கையின் காரணத்தால் இந்தி படிக்காமல் இருந்துவிட்ட இளைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறபோது,​​ கன்றின் குரல் கேட்ட தாய்போல் ஓடோடிச் சென்று அவர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது மாநில அரசின் கடமையல்லவா?​ இந்தி படிக்கவில்லையென்றால் மத்திய அரசில் வேலையில்லை என்று சொல்வதைவிட,​​ மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தமிழர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று ஒருவரி சேர்த்துவிடலாமே!​ ​

கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவானது இந்திய சட்டக் குழுவிடம் ஒரு பரிந்துரையை அளித்தது.​ அதில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348-ஐ திருத்தி,​​ உச்ச நீதிமன்றத்திலும்,​​ உயர் நீதிமன்றங்களிலும் இந்தியில் அலுவல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.​ சட்டக்குழுவின் ​ தற்போதைய தலைவரான நீதியரசர் ஏஆர்.​ லட்சுமணன் அந்தப் பரிந்துரையை கடந்த ஆண்டு அடியோடு நிராகரித்தார்.​ இவ்வாறு செப்படி வித்தைகள் செய்து இந்தியைத் தூக்கிப்பிடிக்க வடபுலத்தவர் மேற்கொள்ளும் முயற்சிகளின் முனை முறிந்துபோகச் செய்வதற்கான ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இல்லாதது வேதனைக்குரியது.​ ​

தமிழ்வழிக் கல்விக்கொள்கையால் தம் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பை இழந்துநிற்கும் ​ தமிழ் இளைஞர்களுக்கு,​​ மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.​ ரயில்வே தேர்வுகளை இனி அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என்று கடந்த அக்டோபர் 5-ம் தேதி அவர் தெரிவித்து,​​ அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்.​ கடந்த பல ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்த,​​ இருக்கிற தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த அமைச்சரும் தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட எங்கும் வைத்ததாகத் தெரியவில்லை.​ மம்தா பானர்ஜிக்கு மாத்திரம் இது எப்படி சாத்தியப்பட்டது?​ மம்தா பானர்ஜி என்ன வங்காளிகளின் வழிபடு தெய்வமான துர்க்கையைப் போன்று பத்துக் கைகளும் பராசக்தி அவதாரமுமாகவா இருக்கிறார்?​ எல்லா வங்காளிகளையும் போலவே தாய்மொழிப்பற்று அவருடைய உதிரத்தில் தோய்ந்து கிடக்கிறது.​ தமிழர்களிடத்தில் தாய்மொழிப்பற்று தேய்ந்து கிடக்கிறது !​ ​

தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து காத்து,​​ அதை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற உணர்வுபூர்வமான சிந்தனை உச்சி முகர்ந்து மெச்சத்தக்கதே.​ தாய்மொழியைக் கண்பாவைபோல் கட்டிக்காக்காத பல இனங்களின் மொழிகள் வழக்கொழிந்துபோயின என்பது வரலாற்றின் ஏடுகளில் காணக்கிடக்கிறது.

Sunday, March 14, 2010

உங்களுக்கு எவ்ளோ கடன் தெரியுமா?

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறதாம், அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கூடதான்! அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளதாம். இதனால், தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும், 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, முந்தைய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி, புதிய வரிகளை விதித்தார். இதனால், மக்கள் மீதான சுமை அதிகரித்தது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், தமிழக அரசின் கடன் 53 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருந்தது. இப்படி மாறி மாறி கடனை வாங்கினாலும், அதை நியாயப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் தவறவில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடன் வாங்குவது அவசியம் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் செயல்பட முடியாது என்றும் நியாயப்படுத்துகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, 10 சதவீதத்துக்கு உள்ளாகவே கடன் வாங்குகிறோம் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு குறைவாகவே, பட்ஜெட் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. பொதுக் கணக்கை மட்டும் பார்க்காமல் மற்றவற்றையும் சேர்த்தால், 3 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக் கும் என்பது தான் உண்மை. முந்தைய ஆட்சிகளில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு கூடுதலாக இருந்தது. 1999ல் 8,545.81 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட போதிலும், 5,438.15 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டில், 11 ஆயிரத்து 596 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 7,719 கோடியே 99 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டது. 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், 65 ஆயிரத்து 627.63 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 34 ஆயிரத்து 844.71 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கடன் வாங்குவது குறைந்தும், திருப்பிச் செலுத்துவது அதிகரித்தும் வந்ததைக் காண முடிகிறது. கடந்த 2006ல் தி.மு.க., அரசு அமைந்த பின், 53 ஆயிரத்து 526.63 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, இதுவரை 19 ஆயிரத்து 155.84 கோடி ரூபாய் தான் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை விட தி.மு.க., ஆட்சியில் குறைவான அளவே கடன் வாங்கப்பட்டிருந்தாலும், திருப்பிச் செலுத்தும் தொகை மிகக் குறைவாக இருந்ததால், கடன் சுமை அதிகரித்துள்ளது.

பொதுக் கடனை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கடனுக்கான அசல் மற்றும் வட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில் தான், திருப்பிச் செலுத்தப்படுகிறது. இருந்தாலும், கடன் சுமையைக் குறைக்க, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்து இருக்கலாம். ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக கடன் வாங்கி ஈடுகட்டுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு ஈடுகட்டப்பட்டு, அதிகரித்துள்ள கடன் சுமை ஒவ்வொன்றும் மக்கள் தலையில் தான் விடியும். மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலில் ஒவ்வொரு லிட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதியளவு மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாகப் போகிறது. சாலை வரி, கல்வி வரி போன்ற சேவை வரிகள், சம்பளம் வாங்குவோரிடம் மாநகராட்சிகள் வசூலிக்கும் தொழில் வரி, இது தவிர ஆண்டுதோறும் வருமான வரி என, அனைத்து விதத்திலும் வரிகளைச் செலுத்தி, நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறிக் கொண்டுள்ளனர். மக்களின் இந்தச் சுமையை குறைக்க வேண்டிய அரசு, மேலும் மேலும் கடனை வாங்கி, அதைச் சரிகட்ட, இது போன்று புதுப்புது வழிகளில் வருவாய் தேடி வருகிறது. கடந்த நான்காண்டு காலத்தில், தமிழக அரசு எந்த பொருளுக்கும் வரியை உயர்த்தாவிட்டாலும், "டாஸ்மாக்' வருமானம் மற்றும் உள்ளாட்சிகள் மூலம் வருவாய் உயர்வு போன்றவற்றால் சமாளித்து வருகிறது. அதே சமயம், கடன் வாங்கும் அளவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழக அரசுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

கடந்த 1988-89 வரை, கடன்கள் ஆண்டுக்கு 1,027 கோடி, 1,554 கோடி ரூபாய் என்ற அளவில் தான் வாங்கப்பட்டது. திருப்பிச் செலுத்தியது போக, மீத கடன் சுமை, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் அளவில் இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த கடன் சுமை தான், மொத்தமாக இன்றைக்கு 73 ஆயிரம் கோடி ரூபாயாக தமிழகத்தின் மீது உள்ளது. ஏறத்தாழ, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி பொறுப்புடைமைச் சட்டப்படி, மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் பெறக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. அதற்கு மேல் கடன் வாங்கினால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். காரணம், அதற்கு மேல் கடன் வாங்கினால், வட்டியை மட்டுமே கட்ட முடியும்; அசலை திருப்பிச் செலுத்த முடியாது.

Wednesday, March 10, 2010

ஓவியர் எப்.எம்.உசேனுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு தர???

ஓவியர் எப்.எம்.உசேன், நடிகை மாதுரி தீட்சித்தின் தீவிர பக்தரான இவர் வக்ர புத்தியின் விளைவாக, சில இந்துக்கடவுள்களை இவர் அம்மணமாக வரைந்து, 20 ஆண்டுகளுக்கு முன் வம்பில் மாட்டிக் கொண்டவர். அம்மணமாக அனுமான், ஆடை இல்லாத சீதையை முதுகில் சுமந்து கொண்டு பறப்பதாக, ராமாயணத்தில் எங்கே ஐயா வருகிறது? எனினும், உசேனின் கற்பனை, அம்மாதிரி சித்திரத்தைத் தீட்டியுள்ளது. விளைவு, உசேனுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள், நீதிமன்றங்களில் வழக்குகள். ஓடிவிட்டார் ஓவியர் முஸ்லிம் நாடுகளுக்கு. தற்போது, "கத்தாரில்' தங்கியுள்ளார். அந்நாடு அவருக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அரபுமொழி தெரிந்தவர்களுக்கு, அங்கு குடியுரிமை வழங்கப்படுவது எளிது என்கின்றனர். இந்த குடியுரிமையை ஏற்றுக் கொண்ட ஹுசேன் , தோகாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தன் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இருந்தாலும், தன் தாய் நாடான இந்தியாவுடன் உள்ள தொடர்பை துண்டிக்க விரும்பாத அவர், வெளிநாட்டு இந்தியருக்கான குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

கருத்து மற்றும் படைப்புச் சுதந்திரம் ஒரு கலைஞனுக்கு உண்டு என்பது இவர்களது வாதம். ஒரு கலைஞனின் வரம்பு மீறிய சிந்தனைச் சுதந்திரம், ஒரு மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்பதை இவர்கள் வலியுறுத்துவதில்லை. தற்சமயம், "ஓவியர் உசேனை, நமது நாட்டிற்குத் திரும்ப அழைத்து, அவருக்கு தகுந்த பாதுகாப்பளிக்க வேண்டும்” என்று, சில அறிவு ஜீவிகளும், அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர். இந்தியாவில் இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி கிடையாது. எனவே, பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைப்பது தவிர வேறு வழியில்லை என்பதால், அதற்கான நடைமுறைகளை அவர் பின்பற்றியிருக்கிறார்.

முஸ்லிம்களை தாஜா செய்வதே, மதச்சார்பின்மைக்கு அடையாளம் என்று கருதிடும் நமது மத்திய அரசும், அவர் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று, அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு தர யோசித்து வருகிறது. இது ஆபத்தான போக்கு. வீண் வம்பை வரவேற்பதாக முடியும். உசேன் சாகேப், முஸ்லிம் நாடுகளிலேயே சந்தோஷமாக இருக்கட்டுமே?

Tuesday, March 9, 2010

பெண்களுக்கான 33% வரமா? சாபமா?

1997ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. இன்றைக்கு எந்த அடிப்படையில் அதன் நிறைவேற்றத்தை சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் (தி.மு.க.வும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது) எதிர்க்கின்றனவோ அதே காரணத்திற்காகவே இன்றும் எதிர்க்கின்றன. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்களிக்க வேண்டும் என்பதை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. ஆனால், இந்தியாவைப் போன்ற சாதிய சமூதாயம் நிலைபெற்றுள்ள ஒரு நாட்டில் உண்மையான பிரதிநிதித்துவம் எல்லா சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டுமெனில், உள் ஒதுக்கீடு - அதாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம், கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கும் - உரிய விழுக்காட்டளவில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

அதனால்தான், இக்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டை காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாக எதிர்த்து எந்த விளக்கத்தையும் தர மறுக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை நிறைவேற்றிட வேண்டும், பிறகு உள் ஒதுக்கீட்டை செய்துக்கொள்ளலாம் என்பது. ஆனால், அதனை முதலிலேயே செய்து நிறைவேற்றிட வேண்டும் என்பது எதிர்க்கும் கட்சிகளின் நிலைப்பாடாகும். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்போர், நாட்டின் நலனுடன் தாங்கள் சார்ந்த மாநிலத்தின் நலனையும், அத்தோடு இந்நாட்டின் உற்பத்தியில் தங்களின் உழைப்பின் மூலம் பெரும் பங்கு அளிக்கும் அனைத்து சமூகத்தின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயலாற்றுபவர்களாக இருக்க வேண்டும். அந்த நிலை நமது நாடாளுமன்றத்தில் நிலவ வேண்டுமெனில், பெண்கள் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து அதனை நிறைவேற்றலாம். அதிகாரமயமாக்கல் என்பது அனைத்துத் தட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்க வேண்டுமல்லவா?

நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு செய்வதால், அது ஜனநாயக ரீதியான உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கும் பதில் தேட வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது. ஊராட்சி மன்றம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சிகளில் தற்போது பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

இந்த ஒதுக்கீட்டின் காரணமாக, மக்களுக்கு தொண்டு செய்யும் அந்த அதிகாரத்தில் வந்த அமர்ந்துள்ள பெண்களெல்லாம் யார் என்று ஆராய்ந்தால், அவர்கள் அனைவரும் எந்தக் கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டார்களோ, அந்தக் கட்சியின் அப்பகுதியில் முக்கியப் பிரமுகரின் மனைவியாகவே, பெண்ணாகவோ அல்லது உறுப்பினராகவோதான் இருக்கின்றனர். பெண்கள் ஒதுக்கீடு இல்லாமல், தேர்தல் நடந்திருந்தால் யார் அந்தந்தக் கட்சிகளின் சார்பாக நின்றிருப்பரோ அவர்களுடைய மனைவி அல்லது குடும்பத்தார்தான் இந்த ஒதுக்கீட்டின் மூலம் தேர்தலில் நின்று பதவிக்கு வந்துள்ளனர். இந்த நிலையை மாற்றக் கூடிய ‘சக்தி’ பெண்கள் ஒதுக்கீட்டை ஆதரிக்கும், எதிர்க்கும் எந்தக் கட்சிக்காவது இருக்கிறதா?

மனைவி பதவியில் இருக்கிறார், பின்னால் இருந்து கட்சிக்கார கணவன் இயக்குகிறார்! பெண்கள் ஒதுக்கீடு உள்ளாட்சி நிர்வாகத்தில் சாதித்துள்ளது இதுதான். எனவே, இதுநாள் வரை எது உள்ளாட்சி நிர்வாகங்களில் நடந்து கொண்டிருக்கிறதோ அதுவே நாளை நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் நடைபெறப் போகிறது! ஏற்கனவே நமது நாட்டு அரசியல் ஜனநாயகம் என்பது பிரதமர் பதவியிலிருந்து முதல்வர், அமைச்சர், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆவது வரை குடும்ப ஜனநாயகமாகத்தான் இருக்கிறது. இதில் பெண்களுக்கான ஒதுக்கீடும் வந்துவிட்டால் அது ‘குடும்ப ஜனநாயக சாம்ராஜ்’யங்களை மேலும் பலப்படுத்தத்தான் உதவுமே தவிர, அது எந்த விதத்திலும் பெண்களை அதிகாரமயமாக்க உதவப் போவதில்லை. நமது நாட்டின் அரசியல் போக்கு அப்படி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸில் இருந்து பா.ஜ.க., கம்யூனிஸ்ட் வரையிலான தேசியக் கட்சிகளிலிருந்து தி.மு.க., பிஜூ ஜனதா தளம் வரையிலான மாநிலக் கட்சிகள் வரை பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை உள்ளனவாக இருந்தால், அதில் ஒரு நிபந்தனையைச் சேர்க்க வேண்டும். ஒரு குடும்பத்திலுள்ளவர் தேர்தல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட உறுப்பினராக நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டப் பேரவையிலோ அல்லது உள்ளாட்சி நிர்வாகத்திலோ அல்லது பிரதமராகவோ, முதல்வராகவோ அல்லது அமைச்சகராகவோ இருந்தால் அவருடைய இரத்த உறவினராக உள்ள பெண்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனையைச் சேர்க்க வேண்டும்.

ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பெண் அவ்வாறு பதவியில் இருந்தாலும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ கூட தேர்த‌லில் போட்டியிட முடியாது என்ற நிபந்தனையும் இருக்க வேண்டும். அப்போது அரசியல் கட்சி, குடும்ப செல்வாக்கு வளையத்திற்கு வெளியே உள்ள பெண்களுக்கு வாய்ப்பும் கிடைக்கும், குடும்ப அரசியலிற்கும் ஒரு முடிவும் ஏற்படும்.

Monday, March 8, 2010

நம் தாத்தாக்களின் கனவுக்கன்னி!

ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை, இன்று பெங்களூருவில் கிழிந்த உடையுடன், கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்த்து கொண்டிருக்கிறார். அந்த பழம்பெரும் நடிகையின் பெயர் காஞ்சனா. சிவந்த மண், காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் உள்ளிட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் காஞ்சனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களின் மூலம் லட்ச லட்சமாய் சம்பாதித்தார். ஆனால் இப்போது பெங்களூருவில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துக் கொண்டிருப்பதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.

பெங்களூருவின் புறநகர் பகுதியான எலகங்காவில் உள்ள கணேசா கோயிலுக்கு அருகில் வசித்து வரும் அவர் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாராம். மஞ்சள் நிற பழைய நூல் புடவை, கிழிந்த ஜாக்கெட்டுடன் அந்த பகுதியை வலம் வரும் காஞ்சனா, ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படித்து முடித்து விட்டு ஏர் ஹோஸ்டஸ் பணியில் சேர்ந்தேபோதே ஜமீன் வீட்டு பெண் வேலைக்கு ‌போவதா? என்று குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதாம். குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி நடிகையானவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் பலருக்கும் தெரியாத சமீபத்தில் சரோஜாதேவிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்பார் என திரையுலகை சேர்ந்த பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சரோஜாதேவியே நேரில் சென்று அழைத்தும் அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் காஞ்சனா தவிர்த்தார்.

இந்த நிலையில்தான் காஞ்சனா பற்றிய இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. தான் இப்போது படும் கஷ்டம் குறி்த்து காஞ்சனா அளி்த்துள்ள பேட்டியில், ஒருவர் நன்றாக வாழ்ந்ததை வெளிப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படலாம். எனது தற்போதைய வாழ்க்கையை‌ வெளியுலகம் அறிந்து, ஐயோ... இப்படி ஆயிட்டாளே... என்று என் மீது இரக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நன்றாக வாழும் காலத்தில் தான் சம்பாதிப்பதை யாரையும் நம்பி ஒப்படைக்கக் கூடாது. அப்படி செய்தால் என்னை என்னைப்போலத்தான் கஷ்டப்பட வேண்டும். இது என் தலைவிதி. மகாராணி போல வாழ்ந்தவள் இன்று இப்படி அல்லாடறேன், என்று கூறியுள்ளார்.

திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் எத்தனையோபேர் காஞ்சனாவைப் போன்று கஷ்டத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் வீரியமுடனம் பேசும் நடிகர்களும், நடிகர் சங்கமும் இதுபோன்று கஷ்டப்படும் நட்சத்திரங்களுக்கு ஏதாவது உதவி செய்வார்களா? அல்லது கப்சிப்பென கண்களை மூடிக் கொண்‌டே இருந்து விடுவார்களா?

Sunday, February 21, 2010

நடக்கப்போவது என்ன? பென்னாகரம் தொகுதியில் சுறுசுறுப்பு

பென்னாகரம் இடைத்தேர்தல் தேதி ஏற்கனவே ஒரு முறை அறிவித்தபோதே, தி.மு.க., - பா.ம.க.,வினர், முழு வீச்சில் தேர்தல் பணியை துவங்கி விட்டனர். இடையில், லேசான தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், மார்ச் 27ம் தேதி பென்னாகரம் இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் தேர்தல் பணிகளில் பா.ம.க., - தி.மு.க.,வினர் தீவிரம் காட்ட துவங்கி விட்டனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், தர்மபுரியில் கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேர்தல் பணி குறித்தும், வரும் நாட்களில் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு போலீசில் முன் அனுமதி பெறுவது குறித்தும் அந்தந்த பகுதி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையடுத்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, பணிகளை கவனிக்கத் துவங்கி விட்டனர். அதேபோல, சென்னை பொதுக்குழுவுக்கு சென்று திரும்பிய தி.மு.க.,வினரும், முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.தேர்தல் அறிவித்து, ஒத்தி வைக்கப்பட்ட கால அவகாசத்தில், பல்வேறு பின்தங்கிய கிராமங்களில் சாலை, பஸ், குடிநீர் வசதியை, ஆளுங்கட்சியினர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி செய்து கொடுத்துள்ளனர். பா.ம.க.,வினர் தங்களது ஜாதிப் பின்னணியை பயன்படுத்தி, கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்தனர்.இதனால், பென்னாகரம் தொகுதியில், தி.மு.க., - பா.ம.க., மட்டுமே மோதுவது போன்ற ஒரு தோற்றம், வாக்காளர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகளின் நிலை மோசமாக உள்ளது. சுவர் விளம்பரங்கள் எழுதக்கூட அவர்களுக்கு இடமில்லாத அளவுக்கு, தி.மு.க.,வும், பா.ம.க.,வும் ஆக்கிரமித்து விட்டன; இரவு, பகலாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன.

குழப்பம்: அ.தி.மு.க., சார்பில், தர்மபுரி மாவட்ட செயலர் தாளப்பள்ளம் அன்பழகன் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. தே.மு.தி.க.,வில் டாக்டர் செந்தில் உள்ளிட்ட ஐந்து பேர், கட்சித் தலைமையிடம் "சீட்' கேட்டுள்ளனர். தலைமையின் முடிவு தெளிவில்லாமல் இருப்பதால், அக்கட்சியினரும் குழப்பத்தில் உள்ளனர்.அ.தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் சார்பில், விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விடுவர் என்று கூறப்படுகிறது. அந்த அறிவிப்பும் வந்தால், தேர்தல் களம் மேலும் விறுவிறுப்படையும்.

சமீபத்தில் டில்லி சென்று திரும்பிய ஜெயலலிதா, "பென்னாகரம் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடும்' என அறிவித்தார். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் 43 ஆயிரம் வாக்காளர்கள் விடுபட்டிருப்பதாக புகார் தெரிவித்த நிலையில், தேர்தல் தேதியை மே மாதம் வரையில் தள்ளிப் போட வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க., எண்ணியது. இந்நிலையில் திடீர் தேர்தல் அறிவிப்பு, அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் இறங்கியிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்ட போதும், இவ்விரு கட்சியும் வேட்பாளர் தேர்வு பற்றி அதிக பரபரப்பு காட்டாதது, கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற கட்சியினரும், அ.தி.மு.க.,வின் தேர்தல் வியூகத்தை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாற்றத்தில் உள்ளனர்.

எது எப்படியிருந்தாலும் நடக்கப்போவதை நாடறியும்!!!

Monday, February 8, 2010

திருட்டு விசிடி-க்கு ஆப்பு வைக்கும் யோசனைகள் சில...

நாட்டுப்புறக் கலைகள் மட்டுமே இருந்த காலத்தில் திரைப்படம் வந்தபோது, நமது கிராமியக் கலைகள் பாதிக்கப்படத்தான் செய்தன. பிறகு வானொலி, பிறகு தொலைக்காட்சி வந்தபோது திரைப்படங்கள் பாதிக்கப்பட்டன. இப்போது அதைவிட நவீனமாக இணையதளங்கள் வந்துவிட்டன. இணைய தளங்களில் வீட்டில் இருந்தபடியே புத்தம்புது திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்துவிடலாம். வெளிநாடுகளில் பெரும்பாலானவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். இதுவும் ஒருவகையில் முறைகேடானதே.

விசிஆர் வந்தபோதும் பல புதிய திரைப்படங்கள் கடைகளில் வாடகைக்கு கிடைக்கத்தான் செய்தன. பின்னர் விசிடி இப்போது டிவிடி. உரிமை மீறல் குற்றங்களுக்காக அந்த காலத்திலிருந்தே பல கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தி, பல திருட்டு விடீயோ காஸட்டுகளையும், இப்போது பல திருட்டு விசிடி-களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

எந்தவொரு புதிய ஊடகம் வந்தாலும், அதற்கு முந்தைய ஊடகத்திற்கு பாதிப்பு இருக்கத்தான் செய்யும். இதை தவிர்க்க முடியாது. நாட்டில் யாருமே டிவிடி-களையோ, விசிடி-களையோ பார்க்கக்கூடாது என்று தடை விதிக்க முடியுமா என்ன? உரிமை மீறலை தடுப்பதற்கு ஒரேஒரு வழிதான் இருக்கிறது.

திரைப்படம் வெளியாகும்போதே அதன் டிவிடி-களையும் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துவிடவேண்டும். அதேபோல புத்தம்புது திரைப்படங்களையும் கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என்று வகை செய்யவேண்டும். இப்படிச் செய்தால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திருட்டு விசிடி-கள் அல்லது திருட்டு பதிவிறக்கம் மூலம் இழப்பு ஏற்படாது. இதைவிட்டு விட்டு அங்கொன்றும்-இங்கொன்றுமாக திருட்டு விசிடி-க்களை பறிமுதல் செய்துவிடுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை.

திருட்டு விசிடி-க்களை விற்பவர்களை பொறுத்தவரையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட படம் அவர்கள் கைக்கு எப்படி போகிறது என்பதை பார்க்கவேண்டும். அவர்களுக்கு படத் தயாரிப்புச் செலவு இல்லை. ஆக மிகக் குறைந்த லாபம் கிடைத்தாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் இழப்பு முழுவதையும் ஏற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆக திரைப்படம் வெளியிடும்போதே விசிடி உரிமைகளையும் விற்பனை செய்து, விசிடி-க்களையும் திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதுதான் புத்திசாலித்தனம்.

Wednesday, February 3, 2010

வலையுலகப் படைப்பாளிகள்!

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.

இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.

உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.

தமிழைப் பொறுத்தவரை, வலைப்பூக்கள்தான் கருத்துகளைச் சொல்லும், படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுநர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களையும் வலைப்பூக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தனது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான, பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைக்குள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாகவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ்பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்.

நாடு, இனம், மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போல பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றை வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.

நர்சிம், பரிசல்காரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல் விளக்கு, க.பாலாசி, நசரேயன், நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள், நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக்கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.

வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட, தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். ÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இன்னும் சிலர், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இதுபோன்ற முயற்சிக்கு வலைப் பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே, ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், வலைப்பூக்கள், ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீனப் பரிமாணங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றிபெறச் செய்ததில் வலைப் பதிவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ளமுடிகிறது.

இன்னும் சில காலம் போனால், மரபுவழி ஊடகங்களுக்கு இணையாக வலைப்பூக்கள் மாதிரியான இணையவழி ஊடகங்களுக்கும் செல்வாக்குக் கிடைத்துவிடும். இதை மரபுவழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும், ஊடகங்களின் பரிமாணம் மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இது தினமணியில் வெளியான கட்டுரை!

Tuesday, January 12, 2010

பொங்காத பொங்கல்!

பொங்கலோ பொங்கல் என்றந் நாளில்
பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில்
இந்நாள்

பொங்கலா பொங்கல் வந்து போகட்டும்
எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே
வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம்
தாங்கும் நிலையில் தமிழர் உளரோ?
காய்கறி விலையோ கைக்குள் இல்லை
வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில்
வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில்

ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும்
அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும்
எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர்
எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம்
காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி
தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத் தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள்

தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை
தமிழ்நாட் டலுவலர் ஒப்பத்தில் தமிழில்லை
தமிழ்நாட்டுக் கோவிலில் தழைக்கும் தமிழில்லை
தமிழன் தமிழ்ஆங்கிலம் கலந்து பேசலால்
தமிழன் பேச்சை "தமிங்கிலம்" என்றார்
உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்
பிழைக்க வந்தோர்மொழிப் பிதற்றல் பெரிதுண்டு
குழைக்கும் குழந்தைநா அம்மை அப்பரை
"மம்மிடாடி" என்றே மயங்கி அழைக்கிறது

கும்மிருட்டில் தமிழர் வாழ்வைக் கொட்டுகின்றார்
கோட்டையில் கோலோச்சத் தமிழில்லை தமிழர்
நாட்டுக் கடைப்பெயரில் தமிழில்லை தமிழர்
வீட்டுஅடுப் பறைவரை வேற்றுமொழி ஆட்சி
மீட்டும் தமிழே வேண்டும் வேட்பினரே
வாட்டிப் பூட்டும் வன்தமிழர் ஆட்சி
நாட்டில் ஒளிபரப்பி நன்றாய்க் கொழுத்த
கதிர்தொலைக் காட்சி தமிழன் கண்டதாம்!

அதுதமிழை மிதிக்கும் ஆங்கிலத்தில் மிதக்கும்
தமிழாய்ந்த தமிழன் பெயர்த்தொலைக் காட்சியில்
உமிழத்தகும் காட்சிகள் உலாவரும் ஆட்சி
பணம்பண்ண வந்தால் பண்பாடா தமிழா
பணப்பண் பாடலே பண்பாடா குமென்பர்
மானோடக் கண்டுளேன் மானாடக் கண்டிலேன்
மானாட மயிலாடக் காண விரும்பின்
கலைஞர் தொ.கா.வில் கண்கூசக் காணலாம்
கலைபண் பாடுஇவை களைந்தமிழில் காணின்
நிலைஉளத்தர் நிலைகுலைவர் நிலைத்த உண்மையாம்
என்னைச் சில்லோர் இதுகாண்க என்றனர்
கண்களை உறுத்தின கவன்று நிறுத்தினேன்

எம்மொழி எம்மினம் எப்படி அழிந்திடினும்
செம்மொழி மாநாடெனச் சித்து விளையாடலாம்
இந்தியும் இத்தாலியும் ஈழ மக்களைக்
கொந்திக் குதறிய கொலைவன் கொடுமையைச்
சட்டப் பேரவைக் கட்டடத் திறப்பினில்
நட்டபட்டு நடிக்கலாம் நாட்டு மக்களைத்
திட்டமிட்டுத் திசைதிருப் பலாம்ஈழ மக்களை
வட்டமிட்டு வளைத்துக் கொத்துக் குண்டுகளால்
சுட்டுத் தீய்த்த சொல்லொணாக் கொடுமையைத்
தொட்டவர் உள்ளமெலாம் துமிக்கிக் குண்டுகள்

முள்ளி வாய்க்காலில் முடிந்தது தொடக்கமே
முள்ளி வாய்க்கால் முழுமூடச் சிங்களர்க்குக்
கொள்ளி வாய்க்கால் கூடிய விரைவில்
உள்ளம் உள்ளவர் உள்ளம் வேகுமே
முள்வேலிக் குள்ளே முடங்கிப் புழுங்கி
உள்ளோம் உள்ளம் உலைக்கலம் ஒக்குமே
நூறா யிரவரை நூழிலாட் டியவனை
சீறிச் சீரழிக்கும் செய்கை தேர்வர்

எல்லாளன் நாட்டின் எழிலுரு அழித்த
பொல்லா இந்தியும் இத்தாலியும் பொசுங்கும்
எல்லா இழப்புக்கும் கையொடு கைகோர்த்த
நல்ல நடப்பிலா நயவஞ்சர் நைந்த‌‌ழிவர்
ஈழ விடியலில் எழிந்திடும் தமிழகம்
வேழம் நிகர்த்த வெல்மறவர் களங்காண்பர்
பொய்யிலாப் புலவன்யான் புகன்றவை யெல்லாம்
பொய்த்தல் இல்லை புவியுளீர் காண்பீர்

நன்றி: புலவர் கி.த.பச்சையப்பன்
http://tamil.webdunia.com/miscellaneous/special/pongal/1001/12/1100112082_1.htm

Monday, January 11, 2010

கலித்தொகையும், குறுந்தொகையும், பரிபாடலும்...........

தன் எதிரே அமர்ந்திருந்த அஞ்சுகத்தைப் பார்க்கப் பார்க்க, சுந்தரிக்கு பற்றிக் கொண்டு வந்தது கோபம். சொந்தக் குழந்தையாயிருந்தால் இழுத்து வைத்து நாலு அறையாவது கொடுத்திருப்பாள். இது அருமைத் தோழியின் ரொம்ப அருமையான குழந்தை. மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாத, தர்ம சங்கடமான நிலை.

இத்தனைக்கும் ஒரு வாண்டு, இந்த மொட்டுக் குட்டிக்கு இத்தனை அடமா? எங்கே கோளாறு? ஏனிந்தக் குழந்தைக்குத்தமிழ் மொழியில் மட்டும் இத்தனை வீம்பு? கோடி காட்டினாலே, கற்பூரம் போல் பற்றிக்கொள்ளும் நல்லறிவும் ஆற்றலும் இருந்தும், பற்றிக்கொள்ள ஏன் மறுக்கிறாள்? சுந்தரிக்கு உண்மையிலேயே அஞ்சுகம் ஒரு சவாலாகவே இருந்தாள்..

சென்ற வாரம் மணிமேகலை, அஞ்சுகம் விஷயமாக உதவி கேட்டபோது, சிரிப்புத்தான் வந்தது. உயர் நிலை நான்கு மாணவிகளுக்கும் கல்லூரி மாணவிகட்கும், இவள் துணைப்பாட வகுப்பு, [டியூஷன்] கற்பித்துள்ளது உணமையே. ஆனால், இவ்வளவு சின்னக் குழந்தைக்கு, அதுவும் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு கற்பித்த அனுபவமே இல்லையே. ஆனால் மணிமேகலையின் கண்ணீரைக் கண்ட போது பாவமாகவும் இருந்தது.

கணவன், மனைவி, இருவருமே பட்டதாரிகள் தான் எனினும், சொந்தக் குழந்தைகள் தான் எப்பொழுதுமே பெற்றோர்களிடம் படிக்க மாட்டார்கள் என்பதும் அறிந்த உண்மை தானே. அதனால் தான் வேறு வழியின்றி, தோழிக்கு உதவுவதாக ஏற்றுக் கொண்டாள்.

ஆனால், அது கடப்பாறையை விழுங்கி சுக்குக் கஷாயம் குடிப்பது போல் எவ்வளவு பெரிய பிரச்சினை என்பதை, அஞ்சுகத்துக்குக் கற்பிக்கத் தொடங்கிய பிறகுதான் தெரிந்தது. பாடல் என்றால் ரொம்ப பிரியமாக அஞ்சுகம் பிடித்துக் கொள்வதை அறிந்த சுந்தரி, முதல் இரண்டு வாரத்துக்கு, தன்னுடைய சொந்தக் கவிதைகள் சிலவற்றைப் பாடலாகக் கற்பித்தாள்.. பொன்னே., பூவே, சின்னக் கண்ணம்மா,, என்ற வரிகளில் குழந்தை மகிழ்ந்து பாடுவது ரசனையாகவே இருந்தது. அதே ரசனையோடு பள்ளி சிலபசுக்கு வந்தபோது மட்டும் அஞ்சுகம் முரண்டு பிடித்தாள்.

அ - அம்மா
ஆ - ஆடு,
இ - இலை

என்று கடகடவென்று அஞ்சுகம் ஒப்பிப்பது, ஏதோ கொயினா மருந்தைக் கஷ்டப்பட்டு, விழுங்கித் தொலைப்பது போல்தான் புலப்பட்டது.. சரி. வீட்டுப் பாடம் கொடுத்தாலாவது செய்கிறாளா என்று பார்க்கலாமே என்றால், கம்பளிப் பூச்சியைப் போல், கையெழுத்தைக் கிறுக்கிக் கொண்டு வந்தாள். பயிற்சிப் பாடமோ பூர்த்தியாக்கப்படுவதே இல்லை.

இத்தனைக்கும் ஆங்கிலத்தில், கணிதத்தில் எல்லாம் 96, 98 மதிப்பெண் வாங்கும், அறிவுள்ள குழந்தை அஞ்சுகம் என அறிந்தபோது, சுந்தரிக்கு எந்தக் கோணத்தில் இக்குழந்தையை அணுகுவது என்றே யோசனையாக இருந்தது. இடையில் பள்ளியின் மாதாந்திரத் தேர்வில் நூற்றுக்கு 45 மார்க் என்ற விகிதத்தில், அஞ்சுகம் தோற்றுப் போன சோகத்தோடு
வந்தாள் ஒரு நாள்.

இன்று குழந்தையிடம் பேசியே ஆவது என்ற கங்கணத்தோடு, சுந்தரி பேசத் தொடங்கினாள்.

"சொல்வதெழுதல் கொடுத்தால் தப்புத் தப்பாய்ச் செய்கிறாய். கையெழுத்திலும் அக்கறை இல்லை. வீட்டுப் பாடம் கொடுத்தாலும் ஒழுங்காகச் செய்து வருவதில்லை. பிறகு நீ ஏன் தோற்றுப் போக மாட்டாய்? ஆங்கிலத்திலும் கணிதத்திலும் காட்டும் அக்கறையில் துளி கூட தமிழில் காட்ட மாட்டேன்கிறாய்? வீணாக என் நேரத்தையும் பாழடித்து, ஏன் எனக்குச் சிரமம் கொடுக்கிறாய்?"

எப்பொழுதும் போல் மெளனமாயிருந்து கழுத்தறுக்காமல், பட்டென்று பதில் கூறினாள் அஞ்சுகம்.

"எனக்குத் தமிழ் படிக்கப் புடிக்கலை டீச்சர்,"

ஒரு வினாடி அதிர்ந்து போனாள் சுந்தரி. அந்தச் சின்ன முகத்தில் பிரதிபலித்த, வெறுப்பைக் காட்டிலும், வேதனை சுந்தரியைத் தொட்டது. நயமாகவே கேட்டாள்.

"ஏம்மா? உன் அம்மா எவ்வளவு கவலைப்படுகிறாள். தாய்மொழி தெரியாமல், வேறு எந்த மொழியில் நீ கெட்டிக்காரியாக இருந்தாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக எங்கேனும் நீ சிரமப்படுவாய்.. தவிரவும் சிங்கப்பூரில் இரண்டாம் மொழியில், நல்ல மதிப்பெண் வாங்காவிட்டால், எந்தத் தேர்விலும் நீ முழுமையான தேர்ச்சி பெற முடியாதே?"

"எனக்குப் புடிக்கலை டீச்சர், தமிழ் படிக்கவே புடிக்கலை டீச்சர், என் கிளாஸ் டீச்சரை எனக்குப் புடிக்கலை.. தமிழ் கிளாஸ்ல படிக்கிற ஃபிரண்ட்ஸ் யாரையுமே எனக்குப் புடிக்கலை டீச்சர்"

உதடு விம்ம, கண் கலங்க, அஞ்சுகம் கூறிவிட்டு அழத் தொடங்கியதும், பாய்ந்து சென்று குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள் சுந்தரி. இவள் மனம் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும், என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.. மேற்கொண்டு என்ன செய்வது என்பதுதான் கவலையாக இருந்தது.

அன்று மாலை குழந்தையை அழைக்க வந்த மணிமேகலையை முதன் முதலாகக் கவனிப்பது போல் கூர்ந்து கவனித்தாள் சுந்தரி. தாயும் மகளும் சுந்தரியின் வீட்டிலிருந்து புறப்படும் வரை, ஒரு வார்த்தை கூட, தமிழில் பேசிக்கொள்ளவே இல்லை. அதற்கடுத்த வாரம், மணிமேகலையின் வீட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்காக, கலந்து கொள்ளச் சென்ற போது, அவ்வீட்டின் சூழ்நிலை, அதிலும் குறிப்பாக அஞ்சுகத்தின் அறை, என எல்லாமே சுந்தரியை வியப்பில் ஆழ்த்தியது.

குழந்தையின் அறை முழுக்க ஆங்கிலப் புத்தகங்கள், ஆங்கிலப் போஸ்டர்... என ஆங்கில மொழி வளத்துக்காக, எல்லாமே இருந்தது. போறாததுக்கு, கணினி வகுப்புக்குக் கூட அஞ்சுகம் போகிறாள், என்பதற்கு அடையாளமாக, விலை உயர்ந்த கணினியும் அஞ்சுகத்தின் அறையில் இருந்தது. வரவேற்பறையில் பியானோவைக் காட்டி, அஞ்சுகம் அருமையாக
பியானோ வாசிப்பாள், என்று மணிமேகலை கூறியபோது, உடனே மணிமேகலையின் கணவர் சாரங்கன் பெருமிதமாகக் கூறுகிறார்.

"பியானோ மாத்திரமல்ல. நடனம் கூட அஞ்சுகம் கற்றுக் கொள்கிறாள், தெரியுமா?"

சுந்தரிக்குச் அஞ்சுகத்தைப் பற்றிய சிக்கலின் நூலிழையைப் பிடித்துவிட்டதாகவே தோன்றியது. அன்று தம்பதிகளின் திருமண ஆண்டுவிழா, என்பதால் பட்டுப் பாவாடையும், ஜரிகை சட்டையும் போட்டுக்கொண்டு, கழுத்தில் காசு மாலை, இடுப்பில் ஒட்டியாணம், காதில் ஜிமிக்கியுமாய், தங்க புஷ்பம் போல் அஞ்சுகத்தை அலங்கரித்திருந்தார்கள்.

"டீச்சர்" என்றவாறே, குழந்தை அய்ஸ்க்ரீமை, சுந்தரிக்கு நீட்டியபோது, அப்படியே கட்டிக்கொள்ள வேண்டும் போல், அத்தனை அழகாக இருந்தாள் கண்மணி..

பெற்றோர் வெட்டிய கேக்கை அத்தனை பேருக்கும் விநியோகித்த அந்தச் சமத்து கூட கண் கொள்ளா காட்சியாகவே இருந்தது. ஆனால் சுந்தரியைக் கவர்ந்த மிகப் பெரும் வேடிக்கை, அந்தக் கும்பலில் யாருமே, தங்களுக்குள் தமிழ் பேசிக்கொள்ளவே இல்லை.
ஆங்கிலம்தான் அங்கு மிகச் சரளமாக ஊடாடியது. அஞ்சுகத்தின் வயதை ஒத்த குழந்தைகளூடே, மகிழ்ச்சியே சாட்சியாய் அஞ்சுகமும் ஆங்கிலத்தை உச்சரித்த அழகு சொக்க வைத்தது.

பிறந்ததிலிருந்தே கேட்ட ஞானமும் பயிற்சியுமே இத்தனை ஆற்றலுக்கும் காரணம் என்பது தெளிவாகப் புரிந்தது.

தமிழில், லகர, ழகரம், கூட வாயில் வராமல் தடுமாறும் குழந்தை... ஆங்கிலத்தில் இப்படிப் பிளந்து கட்டுகிறாள், தவறு எங்கே என்று யூகிப்பதொன்றும் கம்ப சித்திரமல்ல.

மறுவாரம் சுந்தரி எழுதி அரங்கேற்றிய, "சித்திரக் கண்ணம்மா" என்ற குழந்தைகள் நிகழ்ச்சிக்குப் பிடிவாதமாய்ச் அஞ்சுகத்தையும் அழைத்துக்கொண்டு போனாள் சுந்தரி. அஞ்சுகத்தின் வயதுள்ள குழந்தைகளும், அதைவிட வயது குறைந்த குழந்தைகளும், மழலை மிழற்றலோடு, பாரதிக் கவிதையை, அபிநயத்தோடு, உச்சரித்ததை, ஆர்வமாய், வேடிக்கை பார்த்தாள் அஞ்சுகம். தன்னை மறந்து அவர்களுக்கு ஜரிகை எடுத்துக் கொடுக்கவும் உடை அணியவும் கூட உதவினாள்.

மொத்தத்தில் நிகழ்ச்சியை, அணு அணுவாய் ரசித்த அஞ்சுகம், ஏக்கத்துடனேயேதான் வீடு திரும்பினாள் என்பது மறு நாளே தெரிந்தது.

"டீச்சர், நான், நானும் உங்க புரோகிராமில் பங்கெடுக்கலாமா??" என்று தயங்கித் தயங்கி, மறுநாள் அஞ்சுகம் கேட்டபோது, முறுவல் மாறாமலே கேட்டாள் சுந்தரி.

"உனக்குத்தான் தமிழே பிடிக்காதே? என்னுடையது தமிழ் நிகழ்ச்சியாயிற்றே? தமிழ் சரியாகக் கூடப் பேசத் தெரியாத உனக்கு எப்படி வாய்ப்புக் கொடுக்க முடியும்?"

"அதுக்கு நான் என்ன செய்யணும் டீச்சர்?"

"அப்படி வா வழிக்கு! இன்றையிலிருந்து ஞான் கொடுக்கும் பாடங்களை ஒழுங்காகச் செய்யவேண்டும். அடம் பிடிக்கக் கூடாது.!
என்ன சரியா?!"

அஞ்சுகம் அப்படியே தன் வாக்குறுதியைக் காப்பாற்றியது, அளப்பரிய மகிழ்ச்சியைத் தான் கொடுத்தது.

ஆங்கில ஸ்டைலில் தமிழை உச்சரித்தாலும், இரண்டே மாதத்தில், 65 மதிப்பெண் வாங்குமளவுக்கு, அஞ்சுகம் முன்னேறியதில், மணிமேகலையும் சாரங்கனும், வீடு தேடி வந்து நன்றி கூறிய போது, அருமைத் தோழியிடம் இன்று பேசியே ஆவது எனும் உறுதி பிறந்தது.

ஆனால், "வீட்டில் தமிழ் பேசுங்கள், தமிழ்ப் புத்தகங்களை குழந்தைக்கு வாங்கிப் போடுங்கள். தமிழ் நிகழ்ச்சிகளுக்குக் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள்." என்று ஒரு தமிழ்ப் பெற்றோரைப் பார்த்து, உபதேசிக்கும் நிலைமை தனக்கு நேர்ந்ததற்காக உண்மையிலேயே, வெட்கிப் போனாள் சுந்தரி.

"குறைந்த பட்சம் உங்களுக்குள்ளாவது, தமிழில் பேசுங்களேன்,!" என்று சுந்தரி வேண்டியபொழுது, தம்பதிகள் குனிந்த தலை நிமிரவில்லை. அகம் அடிபட்டுப் போனது நன்றாகவே தெரிந்தது.

தங்களுக்குள்ளேயே ஆங்கிலம் தான் சரளமாக இருப்பதால், குழந்தையிடம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள தமிழில் முடியுமா?! என்று மணிமேகலை மெல்லக் கேட்டபோது, மீண்டும் வெட்கியவள் சுந்தரியே.

இவர்களுக்கே ஒழுங்காகத் தமிழ் பேசத் தெரியாது, என்னும் உண்மை, அப்பொழுதுதான் பொட்டில் அறைந்தது. வியந்துபோய்த் தோழியைப் பார்த்தாள்.

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு, கழுத்தில் கெட்டித் தாலி. மூக்கில் கூட ஃபேஷன் மூக்குத்தி, காலில் கூட அது என்ன சொல்வார்கள்??! ஓ! ஓ! மெட்டி, மெட்டி தானே? ஏன்? தோற்றத்தில் கூட இளங்கறுப்பாய் இந்தியத் தோற்றமே! மணிமேகலை, சாரங்கன், என்ற பெயர்கள் கூட அழகான, அருமையான தமிழ்ப் பெயர்கள் தானே?

ஹூம், ஆனால் மொழியைப் பகிர்ந்துகொள்ள மட்டும் ஆங்கிலம் தான் வேண்டும், எனும் இந்த அசட்டுத் தனத்தை மட்டும், சுந்தரியால் ஜீரணிக்கவே முடியவில்லை. மறுநாளே, முதல் வேளையாய், அஞ்சுகத்தின் தமிழாசிரியையைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது, ஒரு இனிய ஆச்சரியம் காத்திருந்தது.

"டீச்சர், என்னைத் தெரியவில்லையா? நான் தான் மரகதம்!" எனக் காதில் தேனாய்ப் பாய்ந்த குரல் தானா, அஞ்சுகத்தின் ஆசிரியை.

"மரகதம் நீயா?! இந்த மரகதத்தையா அஞ்சுகத்துக்குப் பிடிக்கவில்லை? சுந்தரியின் பிரியத்துக்கு உகந்த முன்னாள் மாணவியாயிற்றே மரகதம்?"

"கலித்தொகையும், குறுந்தொகையும், பரிபாடலும், கற்றுக் கொடுங்களேன், டீச்சர்!" என ஸ்பெஷல் டியூஷனுக்கு [சிறப்பு வகுப்புக்கு] ஆசையாய் வந்து போனவளாயிற்றே மரகதம். அரைமணி நேரம் மரகதத்தோடு பேசிய பிறகு.. அஞ்சுகத்தைப் பற்றிய, இரண்டாவது முடிச்சும் அவிழ்ந்தது.

தமிழ் வகுப்பிலும் அஞ்சுகம் ஆங்கிலமே பேசுவதால், மரகதம் கண்டிக்க, தோழிகள் சிரிக்க, எனப் பல, காரணங்களால் தான், அஞ்சுகத்துக்கு, தமிழ் வகுப்பு, தமிழ் டீச்சர், தமிழ்த் தோழியர் என யாரையுமே புடிக்கலை. இப்பொழுது புரிகிறதா??

மரகதம் சுந்தரியின் வேண்டுகோளை, சிறந்த ஆலோசனையாக, செவி மடுத்ததோடன்றி, "இது என் கடமை, டீச்சர்" நிச்சயம் நான் உதவுவேன்" என்றபோதே, பாதிக் கிணறைத் தாண்டிய நிம்மதி பிறந்தது.

சில தினங்களுக்குப் பிறகு, பள்ளியில் கதை சொல்லும் போட்டிக்குத் தன்னை தெறிவு செய்துள்ளதாக மகிழ்ச்சியும் வெட்கமுமாகத் தகவல் கொண்டு வந்தாள் அஞ்சுகம்.

உடனே நூல் நிலையங்களிலிருந்து சில சிறுவர் கதைப் புத்தகங்களைs சுந்தரி, தேர்வு செய்து கொடுத்தாள். கதை சொல்லும் பயிற்சியை, ஏற்ற இறக்கத்தோடு, சுந்தரி கற்றுக் கொடுக்க, சிக்கென அதை அப்படியே பிடித்துக்கொண்ட குழந்தை, போட்டியில் முதல் பரிசு வாங்காவிடினும் , இரண்டாம் பரிசு வாங்கினாள்.

இதற்குப் பிறகு, தொலைக்காட்சியில், தமிழ்ச் செய்தி காணும் ஆர்வம் தெரிந்தது.. "காண்போம், கற்போம்" நிகழ்ச்சியை ரசித்துப் பார்ப்பது மட்டுமன்றி, அஞ்சுகம் அதுபற்றி, நிறைய கேள்விகளும் கேட்டாள். சுந்தரியின் வீட்டிற்கு வரும் தமிழ்ப் பத்திரிகைகளையும் கூட, எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கினாள். இந்த ஆர்வத்தில் சில நாட்களுக்குப் பிறகு, சொந்த வீட்டிற்கும், தமிழ்ப் பத்திரிகை வரும்படி பெற்றோரிடம் ஏற்பாடு செய்து விட்டாள்.

எல்லாவற்றிற்கும் மேலாய் மனthதைக் குளிரக் குளிர அபிஷேகம் செய்த சம்பவம் ஒன்று நடந்தது. ஒரு நாள் மணிமேகலை, தொலைபேசியில் சொல்கிறாள்.

‘சுந்தரி, இப்பொழுதெல்லாம், அஞ்சுகம் சதா வீட்டில் தமிழ் தான் பேசுகிறாள். அதில் பல சொற்கள் புரியவே மாட்டேன்கிறது,
நேற்று, அப்படித்தான், பேருந்துக்கு நேரமாகிவிட்டது என்றபோது, ஒரு வினாடி எனக்கு ஒன்றுமே புரியவில்லை, தெரியுமா?"

"பேரூந்து?!"

சுந்தரிக்கு ஏனோ பெருமிதத்தில் மனசு நிரம்பி வழிந்தது. அதே சமயம் வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போலும் இருந்தது.

மணிமேகலையயும் சாரங்கனையும், இனி அஞ்சுகம் வழிக்குக் கொண்டு வந்து விடுவாள்.

பொறுப்புத் தீர்ந்த நிம்மதியில், தன்னுடைய அடுத்த படைப்புக்காக, எழுத அமர்ந்த சுந்தரி, இறுதியாக ஒருமுறை தொலைபேசியில் அஞ்சுகத்தை அழைத்தாள்.

"என்ன அஞ்சுகம்? பள்ளியில் தமிழ் வகுப்பு எப்படி இருக்கிறது?"

"தமிழ், எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கிறது, ஆசிரியை"

Saturday, January 9, 2010

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்சார் வருமா?

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் எண்ணத்தையும் மழுங்கடிக்கச் செய்து வரும் தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய சென்சார் அமைப்பு வந்தால்தான் இந்தியாவின் பண்பாடு காப்பாற்றப்படும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வினீத் (13). 7-ம் வகுப்பு மாணவர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு காட்சியைப் பார்த்துள்ளார். அந்தக் காட்சியில் ஒருவர் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீப்பிடிக்கச் செய்வது போன்று செய்து காட்டியுள்ளார். இதைப் பார்த்த அவர், தானும் அதுபோலச் செய்து பார்த்துள்ளார். விளைவு தீக் காயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.

இந்தச் செய்தியை நாளிதழ்களில் படித்த யாருக்கும் நெஞ்சம் பதறாமல் இருக்காது.
இளம்பிஞ்சுகளின் மனதில் நஞ்சினைத் தொடந்து விதைக்கும் பணியினை சில ஊடகங்கள் தங்களின் வாழ்நாள் லட்சியமாகவே கொண்டு செயலாற்றி வருகின்றன. அதிலும் அண்மைக்காலமாக நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்ச்சிகளை சேனல்கள் பல தங்களின் வருமானத்துக்காகவும், நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வருவதற்காகவும் சாகசம் என்ற பெயரில் போட்டி போட்டு நடத்தி வருகின்றன.

நிகழ்ச்சிக்கு நடுநடுவே, இதை யாரும் வீட்டில் வைத்து செய்து பார்க்காதீர்கள்.
இது மிகவும் அபாயமானது என்ற அன்புக் கட்டளை வேறு. சிகரெட் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் புகை பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று கடமைக்காக போடுவதைப்போல தொலைக்காட்சி சேனல்களும் இந்த வாசகத்தை ஒளிபரப்புகின்றன.

தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் வயது முதிர்ந்த, வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவித்து உணர்ந்த பெண்களே அந்த சீரியலின் கதாபாத்திரமாக தானும் மாறி அந்தப் பாத்திரம் கண்ணீர்விட்டால் தானும் கண்ணீர் விட்டு, அது சிரித்தால் தானும் சிரித்து, அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து ஒன்றிப் போகும் நிலையில், பாவம் சிறுவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? தொலைக்காட்சிகளின் கீழ்ப்பகுதியில் எப்பொழுதாவது தோன்றி மறையும் எச்சரிக்கைச் செய்திகளைப் பார்த்து இவர்கள் எப்படிக் கடைப்பிடிப்பார்கள்..?

சிறு குழந்தைகள் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக்குறைந்த நேரத்திலேயே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் படங்களை, விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள் அல்லது அறியத் துடிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறோமே, அதனால் ஏதேனும் விபரீத விளைவுகள் நடந்து விடாதா என்று எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் தோன்றவில்லை என்பதுதான் வேதனை.

தொலைக்காட்சித் தொடர்களில் சிலவற்றைப் பார்த்தால், அதில் நடிக்கும் சிறுவர்களைத் தங்கள் வயதுக்கு மீறிய பேச்சைப் பேசச் செய்து இயக்குநர் ம கிழ்ந்திருப்பார். ஆனால், அதேபோன்று அந்தத் தொடரினைப் பார்க்கும் மற்ற குழந்தைகளும் பேசுமே; அது பண்பாட்டுக்கு உகந்ததாக இருக்காதே என்று அந்தத் தொடரின் இயக்குநர் கவலைப்படுவதே இல்லை.

இன்னும் சில தொலைக்காட்சிகள் கையடக்க கேமராவை மறைத்து வைத்து வழியில் செல்வோரை எல்லாம் வழிமறித்து, அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்களின் கடமை(?) ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு, அவர்கள் (மாட்டுபவர்கள்) படும் அவஸ்தைகளைத் தாங்களும் ரசித்து, பின்னர் உலகிற்கெல்லாம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு கடைசியாக ஒரே வரியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. யாரையும் புண்படுத்த அல்ல. என்று நமட்டுச் சிரிப்புடன் எளிதாகக் கூறிவிட்டு மறைகிறார்கள்.

ஆனால், அவ்வளவுநேரம் அந்தச் சம்பவம் அவர்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்பதையும், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட நபரை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அந்த சேனல்களுக்குக் கவலை இல்லை. அவர்களின் ஒரே கவலை எப்படி ரேட்டிங்கை ஏற்றுவது என்பதுதான்.

எனவே, மக்களின் மனங்களைத் தன்வசப்படுத்தி தான் கூறும் கருத்துகளைத் திணித்து வரும் வேலையைத் திறம்படச் செய்து வரும் சேனல்களின் நிகழ்ச்சிகள் மக்களைக் குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கண்டிப்பாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பதுதான் பிள்ளைகள் மேல் பற்றுக்கொண்டுள்ள அனைத்துப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.