Sunday, May 31, 2009

முத‌ல் கு‌ற்றவா‌ளியாக இ‌ந்‌தியா!

பாராளும‌ன்ற தே‌ர்த‌‌‌லி‌ல் த‌மிழ‌ர்க‌ள் பல‌ர் நட‌‌ந்து கொ‌ண்டதை ‌நினை‌க்கு‌ம்போது அவமானமாக இரு‌க்‌கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த இய‌க்குன‌‌ர் ‌‌சீமா‌ன், இ‌னிமேலாவது த‌மிழ‌ர்க‌ள் வெகு‌ண்டு எழ வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌இ‌ல்லை‌வி‌ட்டா‌ல், த‌மி‌‌ழ் இன‌த்தை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர். இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போன வெள்ளியிரவு பொதுக்கூட்டம் நடந்தது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பேசுகை‌யி‌ல், ''இய‌க்குன‌ர் பார‌திராஜா ஒரு மாபெரு‌ம் கலைஞ‌‌ன். பாலா, சேர‌ன், த‌ங்க‌ர்ப‌ச்சா‌ன் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ண்ண‌ற்ற கலைஞ‌ர்க‌ள் பூ‌த்து‌க்குலு‌ங்க காரணமாக உ‌ள்ள அடிமர‌ம். அவ‌ர் அலுவலக வாச‌லி‌ல் உ‌ள்ள வே‌‌ப்பமரமு‌ம் நா‌‌ங்களு‌ம் ஒ‌ன்றாக வள‌ர்‌ந்தவ‌ர்க‌ள். அவ‌ர் அலுவலக‌த்தை தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.ஒரு த‌மிழ‌ன் த‌மிழனாக இரு‌ந்தத‌ற்காக ‌கிடை‌த்த ப‌ரிசு இது. ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு ஆதரவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் இ‌ங்கு ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். பே‌சினா அடி‌ப்போ‌ம் இதுதா‌ன் ஜனநாயகமா?

தா.பா‌ண்டிய‌ன் காரை எ‌‌‌ரி‌த்தா‌ர்க‌ள், யாரை கைது செ‌ய்‌தீ‌ர்க‌ள்? த‌மிழ‌ன் மன‌‌தி‌ல் இடி‌விழு‌ந்து ந‌ி‌ற்‌கிறா‌ன். த‌மி‌‌ழ்‌ச்சா‌தி உறை‌ந்து போ‌ய் ‌கிட‌க்‌கிறது. இ‌ந்‌தியா நட‌த்த‌ வே‌ண்டிய போரை நா‌ங்க‌ள் நட‌‌த்‌தியு‌ள்ளோ‌ம் எ‌ன்று ராஜப‌க்சே கொ‌க்க‌ரி‌க்‌கிறா‌ன். 25,000 ஈழ‌த் த‌‌மிழ‌ர்களை உ‌யிரோடு புதை‌த்து‌ள்ளன‌ர் ‌சி‌ங்கள‌ர்க‌ள். ‌பிரபாகர‌ன் இற‌ந்து ‌வி‌ட்டா‌ர், அவ‌ர் உடலை எ‌‌ரி‌த்து சா‌ம்பலை கட‌லி‌ல் ‌வீ‌சி‌வி‌ட்டோ‌ம் எ‌ன்‌கி‌‌ன்றன‌ர். ‌பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம், மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம்? வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம்.

வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். ‌பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன். ‌தி‌ரிகோணமலையை அமெ‌ரி‌க்காவு‌க்கு ‌வி‌ட்டு‌க் கொடு‌த்‌திரு‌ந்தா‌ல் இ‌வ்வளவு பெ‌ரிய இழ‌ப்பை ச‌ந்‌தி‌த்து இரு‌க்க மா‌ட்டா‌ர். ‌சி‌ங்கள‌ர்க‌ள் செ‌ய்த அ‌ட்டூ‌‌ழிய‌த்தை‌ப் போல நாமு‌ம் செ‌ய்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் ‌பிரபாகர‌ன் செ‌ய்ய‌வி‌ல்லை. க‌ற்ப‌ழி‌ப்புகளை நட‌த்‌தினா‌ர்க‌ள். ப‌ச்‌சிள‌ங் குழ‌ந்தைகளை கொ‌ன்று ‌‌கு‌வி‌த்தா‌ர்க‌ள். ‌பிரபாகர‌ன் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ல், கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து 5 ல‌ட்ச‌‌‌த்‌திற‌்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ம‌க்களை கொ‌ன்று கு‌வி‌த்‌திரு‌க்க முடியு‌ம். அதை அவ‌ர் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை.

மரு‌த்துவமனை, ப‌ள்‌ளி‌க்கூட‌ம், பொதும‌க்க‌ள் வாழு‌ம் பகு‌‌திக‌ளி‌ல் கு‌ண்டுபோட வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டா‌ர். இ‌ன்றை‌க்கு, ‌பிரபாகர‌னி‌ன் 75 வயது ‌த‌ந்தையு‌ம், 72 வயது தாயாரு‌ம் ‌சி‌ங்கள இராணுவ‌த்‌தி‌ன் ‌பிடி‌‌யி‌ல் இரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். ‌விசாரணை எ‌ன்‌‌கிற பெய‌ரி‌ல் அழை‌த்து‌ச் செ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌வ‌ர்களை எ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌சி‌த்ரவதை செ‌ய்‌கிறா‌ர்களோ? தெ‌ரிய‌வி‌ல்லை. ‌சி‌ங்கள இராணுவ‌‌ம் செ‌ய்த அ‌த்து‌மீற‌ல்களு‌க்கு‌ம் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களு‌க்கு‌ம் ஆதார‌ம் இரு‌ப்பதாக இ‌ன்றை‌க்கு அமெ‌ரி‌க்கா செ‌ல்‌கிறது. இ‌‌ந்த அமெ‌ரி‌க்கா அ‌ன்றை‌க்கு ஏ‌ன் சொ‌ல்ல‌வி‌ல்லை?

ஐ.நா. பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌கீ மூ‌ன் எ‌ல்லா‌ம் முடி‌ந்த ‌பிறகு இ‌ன்று இல‌ங்கை‌க்கு செ‌ன்று பா‌ர்வை‌யிடு‌கிறா‌‌ர். உலக‌த் த‌மி‌ழ் இனமே வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தபோது அ‌ன்றை‌க்கு அவ‌ர் செ‌ன்‌றிரு‌க்கலாமே? அ‌ன்று செ‌ல்ல‌‌வி‌ல்லை. ‌சீனா செ‌ங்கொடி தூ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. அ‌ந்த‌க் கொடியை தூ‌க்க அத‌ற்கு எ‌ன்ன தகு‌தி இரு‌க்‌கிறது. இ‌‌ங்‌கிலா‌ந்து, இ‌ஸ்ரே‌ல் போ‌ன்ற நாடுக‌ள் எ‌ல்லா‌ம் ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக வ‌ந்து ‌நி‌ற்‌கி‌ன்றன. ஆனா‌ல் இ‌ந்‌தியா எ‌‌திராக உ‌ள்ளது. இதை‌ச் சொ‌ன்றா‌ல் இறையா‌ண்மை ‌மீறலா? நடேச‌ன், பு‌‌‌லி‌த்தேவ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 350 பே‌ர் வெ‌ள்ளை‌க்கொடி தா‌ங்‌கி ‌சி‌ங்கள இராணுவ‌த்தை நோ‌க்‌கி வ‌ந்தா‌ர்க‌ள். அவ‌ர்களை வ‌‌ஞ்சகமாக கொ‌ன்று கொடு‌ஞ்செய‌ல் பு‌ரி‌ந்ததை உல‌கி‌ல் யாராவது க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்களா?
இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. 5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடை ‌பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடை‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌ன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம். மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம்வரை ‌சி‌ங்கள‌ர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம். ந‌‌ள்‌ளிர‌வி‌ல் ஒரு பெ‌ண் நகை அ‌ணி‌ந்து பாதுகா‌ப்பாக நட‌ந்து செ‌ல்லு‌ம் போதுதா‌ன் சுத‌ந்‌திர‌ம் ‌கிடை‌த்து ‌வி‌ட்டதாக அ‌ர்‌த்த‌ம் எ‌‌ன்று கா‌ந்‌தி கூ‌றினா‌ர். இ‌ந்த கா‌ந்‌தி‌யி‌ன் கனவை ‌பிரபாகர‌ன் ‌நனவா‌க்‌கினா‌ர்.

அ‌‌ற்புதமான த‌மி‌‌ழ்‌‌த் தேச‌த்தை அ‌ங்கு ‌‌நி‌ர்மா‌ணி‌த்தா‌ர். ‌நீ‌தி‌த்துறை, காவ‌ல்துறை உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து துறைகளையு‌ம் க‌ட்டமை‌த்தா‌ர். அ‌ங்கு ‌திருட‌ன் இ‌ல்லை, எ‌ந்த கு‌ற்றமு‌ம் நடைபெற‌வி‌ல்லை. அ‌ப்படி‌ப்ப‌ட்ட தேச‌த்தை ‌சிறை‌த்து ‌வி‌ட்டா‌ர்க‌ள். இத‌ற்கு காரணமாக இரு‌ந்த இ‌ந்‌திய அரசை க‌ண்டி‌ப்பது தவறா? இ‌ந்‌தியா எ‌ன்றா‌ல் ஒரு தேச‌ம். வா‌‌ஜ்பா‌ய் உ‌ள்‌ளி‌ட்ட வேறு பலரு‌ம் ‌பிரதமராக இரு‌ந்து‌ள்ளா‌ர்க‌ள். தேச‌த்தை நா‌ன் குறை கூற‌வி‌‌ல்லை. கா‌ங்‌கிர‌ஸ் அரசையு‌ம் அத‌ன் தலைமையையு‌ம்தா‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்று‌கிறே‌ன்.

இ‌ங்கு‌ள்ள த‌மிழ‌ர்க‌ள் பல‌ர் நட‌‌ந்து கொ‌ண்டதை ‌நினை‌க்கு‌ம்போது அவமானமாக இரு‌க்‌கிறது. பணமா? போரா‌ட்டமா? எ‌ன்ற கே‌ள்‌வி எழு‌ந்த போது, பண‌த்த‌ி‌ன் ப‌க்க‌ம் சே‌ர்‌ந்து ‌வி‌ட்டானே எ‌ன் த‌மிழ‌ன் எ‌ன்று ‌நினை‌த்து வெ‌ட்க‌ப்படு‌கிறே‌‌ன். எ‌ன் ‌வீ‌ட்டு‌க் கூரை ‌தீ‌ப்‌‌பிடி‌த்து எ‌ரியு‌ம்போதுதா‌ன், த‌ண்‌‌ணீ‌ர் எடு‌த்து வருவே‌ன் எ‌ன்ற எ‌ண்ண‌த்த‌ி‌ல் பல த‌‌மிழ‌ர்க‌ள் இ‌ங்கு உ‌ள்ளன‌ர். இ‌ந்த‌நிலை ந‌ல்லதா? உன‌க்கு பா‌தி‌ப்பு வரு‌ம் போது உதவுவத‌ற்கு அரு‌கி‌ல் யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்‌க‌ள். வைகோ, தா.பா‌ண்டிய‌ன் பாராளும‌ன்ற‌த்த‌ி‌ல் இரு‌ந்தா‌ல், த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ள் கட‌லி‌ல் சுட‌ப்ப‌ட்டு செ‌த்‌திரு‌ப்பா‌ர்களா? இ‌னிமேலாவது த‌மிழ‌ர்க‌ள் வெகு‌ண்டு எழ வே‌ண்டு‌ம். ‌இ‌ல்லை‌வி‌ட்டா‌ல், த‌மி‌‌ழ் இன‌த்தை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம்.

இ‌ன்றை‌க்கு உலக அமை‌தி‌க்கான நோப‌ல் ப‌ரிசு‌க்கு உக‌ந்த நப‌ர் மா‌வீர‌ன் ‌பிரபாகர‌ன்தா‌ன். இ‌ந்‌‌தியாவு‌ம் ‌‌சீனாவு‌ம் பா‌‌கி‌ஸ்தானு‌ம் எ‌ந்த கால‌த்‌திலாவது ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்தது‌ண்டா? எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனையை எடு‌த்து‌க்கொ‌ண்டாலு‌ம் ‌சீனாவு‌ம், இ‌ந்‌தியாவு‌ம் அ‌ல்லது இ‌ந்‌தியாவு‌ம், பா‌க‌ி‌ஸ்தானு‌ம் ‌எ‌திரு‌ம் பு‌திருமாக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரையு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌த்து வை‌த்த பெருமை ‌பிரபாகரனை‌த்தா‌ன் சேரு‌ம். ‌பிரபாகர‌னை எ‌தி‌ர்‌ப்பத‌ற்கு‌த்தா‌ன் இவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்து‌ள்ளா‌ர்க‌ள்.
இல‌‌‌ங்கை‌க்கு எ‌திராக ஐ.நா.சபை‌யி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து, சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட நாடு‌‌க‌ள் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் இ‌ன்றை‌க்கு தோ‌ற்கடி‌‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு ஆதரவாக ‌நி‌‌ன்று இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா தோ‌ற்கடி‌த்‌திரு‌க்‌கிறது. ‌தீ‌ர்மான‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்‌றிரு‌ந்தா‌ல் முத‌ல் கு‌ற்றவா‌ளியாக இ‌ந்‌தியா ‌நி‌ன்‌றிரு‌க்கு‌ம். அத‌ன் அரு‌கி‌ல் ‌சீனாவு‌ம், பா‌கி‌ஸ்தானு‌ம் ‌நி‌‌ற்கு‌ம். அ‌ந்த‌ப் ப‌ழி‌க்கு பய‌ந்துதா‌ன் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌‌‌தியா தோ‌ற்கடி‌த்து‌ள்ளது. எ‌ங்க‌ள் ஆ‌ழ்மன‌தி‌ல் வேதனை‌த் ‌தீ எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அது எ‌ப்படி வெடி‌த்து வெ‌ளி‌க்‌கிள‌ம்ப‌ப் போ‌கிறது? எ‌ன்பதை‌‌ப் பா‌ர்‌க்க‌த்தா‌ன் போ‌கி‌றீ‌ர்க‌ள். மான‌மி‌க்க ‌வீர‌ம் பொரு‌ந்‌திய த‌மிழ‌ர்‌ கூ‌ட்ட‌ம் இ‌ன்னு‌ம் இரு‌ப்பதை மற‌ந்து‌விட வே‌ண்டு‌ம்'' எ‌‌ன்று இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பே‌சினா‌ர்.

திராவிட முன்னேற்றக் கழகம்

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை ஈ.வெ. ரா. பெரியார், பின்னாளில் அதனை திராவிடர் கழகமாக்கி சமூக விழிப்புணர்வு இயக்கமாகவே தொடர விரும்பினார். ஆனால், அவரது கொள்கைக்கு மாறுபட்டு, அவரிடம் இருந்து விலகி பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கம் (கட்சி) தோன்றியதும், திமுகவிற்காக எண்ணற்ற தியாகங்களையும், சோதனைகளையும் பல தலைவர்கள் எதிர்கொண்டதையும் வரலாறு தெரிந்தவர்கள் அறிவர். 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராஜன், மதியழகன், ஈ.வி.கே. சம்பத் ஆகிய ஐம்பெரும் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினர். அண்ணாவின் தலைமையில் அரசியல் இயக்கம் மலர்ந்ததும் தற்போதைய திமுக தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதி அக்கட்சியில் இணைந்தார்.
1957இல் தேர்தலில் போட்டியிடுவது என்று ஜனநாயக ரீதியாக அக்கட்சி முடிவெடுத்தபோது, தொண்டர்களும், மக்களும் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் நேரடியாகவும், நேர்மையாகவும் பதிலளித்தார் அண்ணா. அவைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் அடித்தளமாக இன்று வரை நீடிக்கிறது.
1957ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தது. 1967இல் காங்கிரஸ் பேரியக்கத்திடம் இருந்து ஆட்சியை திமுக கைப்பற்றியதும், அறிஞர் அண்ணா முதல்வராகி ஒரே ஆண்டில் (1968) புற்றுநோயால் உயிர் துறந்ததும் அனைவரும் அறிந்த வரலாறு.
அண்ணா மறைவைத் தொடர்ந்து, இயக்கத்தையும், தமிழக ஆட்சியையும் வழிநடத்தும் திறமையுடன் கூடிய 3 பேர் இருந்த நிலையில், இப்போதைய முதல்வர் மு. கருணாநிதி கட்சிக்கும், அரசுக்கும் தலைவரானார்.
மு. கருணாநிதியை திமுகவின் பொதுச் செயலராக்குவதற்கும், முதல்வர் பதவிக்கு முன் மொழிந்ததற்கும், பின்னணியில் அமரர் எம்.ஜி. ராமச்சந்திரன் முழு பக்கபலமாக இருந்தார் என்பதெல்லாம் 2 தலைமுறையைக் கடந்தவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
திமுக தலைமை தனக்கு கிடைக்க உறுதுணையாக இருந்த எம்.ஜி.யாரை வெளியேற்ற, அவர் அ.தி.மு.க.வை உருவாக்க, அது 1977இல் ஆட்சியைப் பிடிக்க, அவர் மறையும் வரை தமிழக அரசியலில் இரண்டாவது இடத்தில்தான் திமுக இருந்தது. எம்.ஜி.ஆர். மறைந்த (1987) பிறகு நடந்த தேர்தலில் (1989) வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் கருணாநிதி.
அதெல்லாம் திமுகவின் பழைய கதை. இன்றைக்கு திமுகவின் நிலை என்ன?
1968இல் தொடங்கி இன்று வரை திமுக-வின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராக 5ஆவது முறையாகவும் பதவியில் இருந்து வருகிறார் மு.கருணாநிதி.
84 வயதாகும் மூத்த, பழுத்த அரசியல்வாதியான கருணாநிதி, கடந்த சில மாதங்களுக்கு முன் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் சக்கர நாற்காலியிலேயே எங்கும் சென்று வருகிறார்.
தமது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், அரசுப் பணிகள் முடங்கக்கூடாது என்று கருதியும் தமது மகனும், மாநில ஊரக மேம்பாடு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வெளியிட்டு, ஸ்டாலினும் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஸ்டாலினை துணை முதல்வராக்கியது குறித்த நியாயத்தை (?) கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விளக்கியுள்ளார்.
உங்கள் மகனை துணை முதல்வராக அறிவித்திருப்பது வாரிசு அரசியல் அல்லவா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஷேக் அப்துல்லாவிற்குப் பின் அவரது மகனும் தற்போதைய மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா முதல்வரானதையும், அவருக்குப் பின் தற்போது காஷ்மீர் முதல்வராக இருக்கும் ஃபரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லாவையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தந்தைக்குப் பின் அவர்களின் வழியில் மகன்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல என்ற ரீதியில் முதல்வர் கருணாநிதி சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.
தமிழக அரசியலில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களை உற்று நோக்கினால் முதல்வரின் நியாயம் என்னவென்று தெரியும்!
விலைவாசி உயர்கிறதே? என்று கேட்டால், அண்டை மாநிலங்களில் பருப்பு முதல் புளி, மிளகாய், கடுகு என அனைத்து பொருட்களின் அடுத்த மாநில விலை, தமிழகத்தில் விலை என ஒரு ஒப்பிட்டுப் பட்டியலை அறிவிப்பார்.
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதே? என்று வினவினால், தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பேருந்து கட்டணம் மிகவும் குறைவு என்று கூறுவார். அதே அரசியல் பாணியில்தான் மற்ற தலைவர்களுடன் ஒப்பிட்டு, ஸ்டாலினின் துணை முதல்வர் ஆக்கியதற்கும் ஒரு நியாயம் கற்பித்துள்ளார்.
கடந்த 2007 மே மாதம் முதல் 2009 மக்களவைத் தேர்தல் வரை எடுத்துக் கொள்வோம்.
மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி. கந்தசாமியால் தோற்றுவிக்கப்பட்டு, இன்று கருணாநிதியின் பேரன்களால் நடத்தப்பட்டு வரும் தினகரன் நாளிதழில் 2007ஆம் ஆண்டு மே 9ஆம் தேதியன்று ஒரு கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டது.
திமுக-வின் அடுத்த தலைவருக்கான வாய்ப்புள்ளவர் யார் என்பதே அது. அதில், இப்போது துணை முதல்வராகியுள்ள மு.க. ஸ்டாலினுக்கே அதிக வாய்ப்பு என்றும், தற்போது மத்திய அமைச்சராகியுள்ள கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரிக்கு மிக மிகக் குறைந்த விழுக்காடே வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தக் கருத்துக் கணிப்பை உண்மையாக்கும் வகையிலேயே இப்போது ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் மிகையில்லை.
காலையில் கருத்துக் கணிப்பைப் பார்த்ததும், மதுரையில் உள்ள தினகரன் நாளிதழின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் அலுவலகக் காவலாளி முத்து ராமலிங்கம், பொறியாளர்கள் வினோத் குமார், கோபிநாத் ஆகிய 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தாக்குதலுக்குக் காரணமானவர்களான மு.க. அழகிரியின் ஆதரவாளர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்போது மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தலைமைச் செயலாளரை மிரட்டினார் என்று கூறி, கட்சியை விட்டே நீக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட உள்கட்சி மோதலில் மத்திய அமைச்சர் பதவியை அவர் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற தொடர் நிகழ்வுகளால், மாறன் சகோதரர்களுக்கு போட்டியாக கலைஞர் டி.வி. என்றொரு இன்னுமொரு தொலைக்காட்சி மிகக் குறுகிய காலத்தில் தோன்றியதுதான் மிச்சம். அரசு கேபிள் டி.வி. உத்வேகப்படுத்தப்பட்டது, இப்பொழுது...? ``3 பேர் சாவுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டோம்'', ``தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்'' என்றெல்லாம் சூளுரைத்த சன் டி.வி. நிர்வாக இயக்குனரும், தயாநிதி மாறனின் சகோதரருமான கலாநிதி மாறன் இப்போது மீண்டும் திமுக பாசறையுடன் ஐக்கியமாகிவிட்டார்.
இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பார்ப்போம்.
திமுக தலைவரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி, மூத்த மகன் மு.க. அழகிரிக்கு தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் என அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிப் பொறுப்புகள்.
2007 மே மாதம் தினகரன் எரிப்பு - 2008 டிசம்பர் மாதம் 1ஆம் தேதி மீண்டும் குடும்பத்தினர் இணைப்பு. இதற்கு பின்னணி செல்பேசி ஒலியலை விற்பனை என்றும் கூறப்பட்டது. எப்படியோ குடும்பம் (கட்சி) ஒன்றானது.
இப்படியெல்லாம் ஒரு வழியாக மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கூடி விட்டவர்கள், மக்களவைத் தேர்தலில் தங்கள் சக்தி (!) அனைத்தையும் கொடுத்து 28 தொகுதிகளில் வென்றும் விட்டனர். வெற்றிபெற்றவர்களில் அதிக வாக்குகள் (?) வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமை மு.க. அழகிரிக்கு கிடைத்தது.
அரசியலே வேண்டாம் என ஒதுங்கிக் கிடந்தவரை தென் மண்டல அமைப்புச் செயலாளராக நியமிப்பதற்கும், மதுரை தொகுதியில் நின்று இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உரம் மற்றும் இரசாயனத் துறை அமைச்சராகி இருப்பதற்கும் முழுமுதற் காரணம் மாறன் சகோதரர்களே எனலாம்.
சரி, மத்திய அமைச்சராக அழகிரி முதல்நாள் பொறுப்பேற்கிறார். அடுத்த நாள் இளைய தளபதி மு.க. ஸ்டாலின் துணை முதல்வராகிறார்.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்பதே திமுக-வின் ஆரம்பகால நிலைப்பாடு.
ஆனால் அது தற்போது மத்தியில் உள்ள கூட்டாட்சியில் மூத்த மகன் அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி. மாநிலத்தில் உள்ள திமுக தலைமையிலான தனி ஆட்சியில் (காங்கிரஸ் ஆதரவுடன்) இளைய மகன் ஸ்டாலினுக்கு சுயமாக முடிவெடுக்கும் துணை முதல்வர் பதவி என்றாகி விட்டது.
வாரிசு அரசியல் என்பது திமுக தலைமைப் பொறுப்பு வகிக்கும் கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் சாசுவதம். அதேபோல் அக்கட்சியின் பொறுப்புக்களில் நீடிக்கவும், போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவும் ஏதாவது ஒரு குடும்பத்தின் ஆசிர்வாதம் தேவை என்பதும் அண்ணா துவங்கிய அக்கட்சியில் நிலவும் இன்றைய ஜனநாயக நிலை!
சேலம் வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு என்.கே.கே பெரியசாமி போன்றவர்களும் தலைமையைப் பின்பற்றுகிறார்கள் என்பது வேறு விஷயம்.
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து கட்சியினரிடையேயும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றவர் முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன். அவர் ஒரு அதிகாலை நேரத்தில் சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்.
அந்த வழக்கில் தற்போதைய மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உட்பட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு வேறு மாநிலமான ஆந்திராவின் சித்தூர் நீதிமன்றத்தில் ஃபைசல் செய்யப்பட்டு விட்டது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம்சாற்றப்பட்டவர்கள் மீதான குற்றச்சாற்றை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால், அனைவரும் விடுதலை செயயப்பட்டனர் என்பதே அந்தத் தீர்ப்பு.
சரி, தா. கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்டார். அவரது மகனோ அல்லது மகளோ ஏன் அரசியலுக்கு (அழைத்து) வரவில்லை?
மிசா காலத்தில் 1976ஆம் ஆண்டில், மு.க ஸ்டாலின் சிறையில் தள்ளப்பட்டு, கொடுமையான தாக்குதலுக்கு உள்ளானதைக் காட்டிலும் துணை முதல்வர் பதவியை பெருமையாகக் கருத மாட்டார் என்று மு. கருணாநிதி கூறியுள்ளார்.
ஸ்டாலினுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேயர் சிட்டிபாபு சிறையிலேயே உயிரிழந்தார். சிட்டிபாபுவின் மகன், மகள்கள் கட்சியிலோ அல்லது ஆட்சியிலோ பெரிய பதவிக்கு வரவில்லையே ஏன்?
ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்பதை கருத்தில் கொண்டு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே உட்கட்சியில் நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்ட வேலைகள் தொடங்கி விட்டதை யாராலும் மறுக்க முடியாது.
1972இல் எம்.ஜி.ஆர், 1993இல் வைகோ என்று திமுக பிளவு பட்டதன் பின்னணியில் குடும்ப பாசம் இருந்ததை அரசியல் அறிந்தோர் அனைவரும் அறிந்திருந்தனர்.
தமக்கு அடுத்த தலைவர் மு.க. ஸ்டாலின் என்பதை துணை முதல்வர் பதவி அளித்ததன் மூலம் முதல்வர் கருணாநிதி, கட்சியினருக்கும், மக்களுக்கும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.இதனை திமுகவில் அண்ணா காலந்தொட்டு நேர்மையாக அரசியல் பணியாற்றி வருபவர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலேயே ஒரு மிகப் பெரிய மக்கள் பேரியக்கத்தை அரசிலியக்கமாக்கி அதனை உட்கட்சி ஜனநாயகத்துடன் வளர்த்த பெருமை அண்ணாவிற்கு உண்டு.
அவரது பார்வை மக்களையும், பகுத்தறிவையும் சார்ந்தே இருந்தது. அதனால்தான் அவருக்குப் பின் அவரது மனைவியோ அல்லது (வளர்ப்பு) மகன்களோ வரவில்லை. அண்ணா கண்ட தலைவர்களைப் போல, எந்த ஒரு தலைவரும் மாபெரும் தலைவர்களை அரசியல் களத்தில் வார்த்தெடுத்து வழங்கியதுமில்லை.
அதனால்தான் தமிழ்நாட்டின் உரிமை முழக்கம் நாடாளுமன்ற அவைகள் அதிரும் அளவிற்கு முழங்கியது. இரா. செழியன் பேசினால் அசைவற்று கேட்டது நாடாளுமன்றம். பிரச்சனையை பிளந்து பார்த்து தீர்வுக்குப் போராடிய ஜனநாயகப் போராளிகளாக பல தலைவர்களை அண்ணா உருவாக்கினார்.
இன்று தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்றவர்களில் நேற்று அரசியலில் நுழைந்த பணக்கார நடிகர் ஒருவர். அண்ணா காலத்து அரசியல் தலைமுறை எங்கே? அவர்களையும் காணவில்லை, அண்ணா துவக்கிய வெகு சன அரசியல் இயக்கத்தின் பண்புகளும் காணவில்லை.