Thursday, December 17, 2009

தொலைக்​காட்​சி​யோ​டும் இணை​யத்​தோ​டும் வாழ்ந்து கொண்​டு...

பொழு​து​போக்கை மைய​மாக வைத்​துக் கண்​டு​பி​டிக்​கப்​பட்ட தொலைக்​காட்சி,​​ இன்று நம் அனை​வ​ரின் வாழ்​வி​லும் தொலைந்து போன காட்​சி​க​ளைத்​தான் காண்​பித்​துக் கொண்​டி​ருக்​கி​றது.​ தொலைக்​காட்​சி​யைப் பார்த்து வாழ்க்​கை​யைத் தொலைத்​த​வர்​க​ளும் உண்டு.​

​ ​ ​ தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​க​ளில் வட இந்​தி​யர்​களை விட தென்​னிந்​தி​யர்​கள் அதிக கவ​னம் செலுத்​து​வ​தா​க​வும்,​​ தமி​ழ​கத்​தில் சரா​ச​ரி​யாக நாள் ஒன்​றுக்கு 6.5 எபி​சோ​டு​க​ளைப் பார்ப்​ப​தா​க​வும்,​​ அதி​லும் குறிப்​பிட்ட 3 சானல்​களை 54 சத​வீ​தம் பேர் பார்ப்​ப​தா​க​வும் தனி​யார் நிறு​வ​னம் ஒன்​றின் புள்​ளி​வி​வ​ரம் தெரி​விக்​கி​றது.​

​ ​ ​ கேர​ளத்​தில் இது 4 எபி​சோ​டு​க​ளாக உள்​ள​தா​க​வும்,​​ பிற்​பக​லில் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​க​ளைப் பார்ப்​ப​தில் கேர​ளம்,​​ கர்​நா​ட​கத்தை விட தமி​ழ​க​மும்,​​ ஆந்​தி​ர​மும் தான் முன்​ன​ணி​யில் உள்​ள​தா​க​வும்,​​ அதி​லும் முன்​ன​ணி​யில் இருப்​ப​வர்​கள் பெண்​கள் என்​றும் அந்​தப் புள்​ளி​வி​வ​ரம் மேலும் தெரி​விக்​கி​றது.​

​ ​ ​ தொலைக்​காட்​சி​க​ளால் நம்​ம​வர்​கள் அடைந்த பயன்​தான் என்ன?​ பக்​கத்து வீடு​க​ளு​ட​னான தொடர்​பும்,​​ சச்​ச​ர​வு​க​ளும் குறைந்​துள்​ளது.​ கொலை​யும்,​​ கொள்​ளை​க​ளும்,​​ வீடு​க​ளில் பிரச்​னை​க​ளும் அதி​க​ரித்​துள்​ளன என்​பது தான் பதில். பெண்​க​ளை​யும்,​​ தொடர்​க​ளை​யும் மைய​மாக வைத்தே இன்​றைய டிவி சேனல்​கள் தொடங்​கப்​பட்டு இயங்கி வரு​கின்​றன.​ தொலைக்​காட்​சி​க​ளில் ஒளி​ப​ரப்​பா​கும் பெரும்​பா​லான நிகழ்ச்​சி​கள் கொலைக்​காட்​சி​க​ளா​கத்​தான் இருக்​கின்​றன என்​பது வருத்​தப்​பட வேண்​டிய ஒன்று.​

​ ​ நல்ல நிகழ்ச்​சி​களை வழங்​கும் டிவி சேனல்​க​ளுக்கு நம்​மி​டையே பெரிய அள​வில் வர​வேற்​பில்லை என்​ப​தும்,​​ இந்த தொலைக்​காட்சி தொடர்​க​ளின் ஆதிக்​கத்​துக்​குக் கார​ணம். பெண்​களை மட்​டு​மன்றி குழந்​தை​க​ளை​யும் கவ​ரக்​கூ​டிய வகை​யில் ​ ஏரா​ள​மான டிவி சேனல்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.​ அதில் ஒளி​ப​ரப்​பா​கும் நிகழ்ச்​சி​கள் பிஞ்​சுக் குழந்​தை​க​ளின் மன​தில் நஞ்சை விதைப்​ப​தா​கத்​தான் உள்​ளன.​ ​

​ ​ சிறு​வ​ய​தி​லேயே டிவிக்கு அடி​மை​யா​கும் குழந்​தை​கள் கண்​பார்​வைக் குறை​பா​டு​க​ளுக்கு உள்​ளா​வ​தா​க​வும்,​​ மன​ரீ​தி​யான பாதிப்​புக்​குள்​ளா​வ​தா​க​வும் ஆய்​வு​கள் தெரி​விக்​கின்​றன.​

​ ​ தீபா​வளி,​​ பொங்​கல் போன்ற விழாக்​களை வீதி​யில் கொண்​டா​டிய காலம் போய் இன்று டிவி​யில் பார்த்து ரசிக்​கிற காலத்​தில் இருக்​கி​றோம்.​ பண்​டி​கைக் காலங்​க​ளில் கோயில்​க​ளுக்​குச் செல்​வது,​​ உற​வி​னர்​க​ளின் வீடு​க​ளுக்​குச் சென்று வரு​வது போன்ற பழக்க வழக்​கங்​கள் எல்​லாம் இன்று நம்​மி​டம் இருந்து மறைந்து போய்​விட்​டது ​(மறந்து போய்​விட்​டது)​ என்றே சொல்​ல​லாம்.​ ​

​ ​ ​ ஓடி விளை​யாடு பாப்பா என்று சொன்ன கவி​ஞர் பாரதி வாழ்ந்த நாட்​டில்,​​ இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழ​கி​விட்​டோம்.​ டிவி சேனல்​கள்,​​ இணை​யத்​தின் வரு​கை​யால் இன்​றைக்கு மைதா​னங்​க​ளில் விளை​யா​டு​வோ​ரின் எண்​ணிக்​கை​யும்,​​ தெரு​மு​னை​க​ளில் கதை பேசு​ப​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மா​கக் குறைந்​துள்​ளது. தொலைக்​காட்​சிக்கு அடுத்​த​ப​டி​யாக இன்று ஏரா​ள​மா​னோரை தன்​னு​டைய கட்​டுக்​குள் வைத்​தி​ருப்​பது இணை​ய​த​ளம்.​ தொலைக்​காட்​சி​யின் பரி​ணாம வளர்ச்சி என்று சொல்​லக்​கூ​டிய அள​வுக்கு வளர்ச்​சி​யை​யும்,​​ வர​வேற்​பை​யும் பெற்​றுள்​ளது இணை​ய​த​ளம்.​ ​

​ ​ அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்​க​ளைப் போன்று தோன்​றி​யி​ருக்​கும் தெரு​முனை பிர​வு​ஸிங் சென்​டர்​கள்.​ தொலைக்​காட்​சி​யால் ​ சமூ​கத்​தில் மாற்​றங்​க​ளும்,​​ இணை​யத்​தால் வளர்ச்​சி​யும் ஏற்​பட்​டுள்​ளன என்​பதை ஒத்​துக்​கொள்​ளும் அதே வேளை​யில் அத​னால் ஏற்​பட்​டுள்ள சமூ​கச் சீர​ழி​வு​க​ளை​யும் எண்​ணிப்​பார்க்க வேண்​டும்.​ ​

​ ​ ​ மணிக்​க​ணக்​காக டிவி மற்​றும் இணை​ய​த​ளங்​க​ளின் முன் அம​ரும் பெரும்​பா​லன இளை​ஞர்​கள் மன​அ​ழுத்​தத்​தால் பாதிக்​கப்​ப​டு​வ​தா​க​வும்,​​ தவ​றான வழி​க​ளில் செல்​வ​தா​க​வும்,​​ சிலர் தற்​கொலை செய்து கொள்​ளும் நிலைக்​குத் தள்​ளப்​ப​டு​வ​தா​க​வும் மருத்​து​வர்​கள் கூறு​கின்​ற​னர்.​ ​

​ ​ ​ சுற்​றத்​தோ​டும்,​​ உற​வு​க​ளோ​டும் வாழ்ந்​த​வர்​கள் அக்​கால மனி​தர்​கள்.​ தொலைக்​காட்​சி​யோ​டும்,​​ இணை​யத்​தோ​டும் வாழ்ந்து கொண்​டி​ருக்​கி​ற​வர்​கள் இக்​கால மனி​தர்​கள்.​ இன்​றைய இளை​ஞர்​கள் விளை​யாட்​டுப் போட்​டி​க​ளில் பங்​கேற்​ப​தை​விட,​​ அதைப் பார்த்து ரசிப்​ப​தைத்​தான் விரும்​பு​கின்​ற​னர்.​ இதன்​வி​ளைவு கிரிக்​கெட் தவிர மற்ற விளை​யாட்​டு​க​ளில் மெச்​சு​கின்ற அள​வுக்கு இந்​தி​யர் யாரும் இல்லை.​ ​ இந்​தி​யா​வின் தேசிய விளை​யாட்​டான ஹாக்​கி​யின் நிலையோ மிக​வும் பரி​தா​பத்​துக்​கு​ரி​யது.​

​ ​ ​ உலக வரை​ப​டத்​தில் ஒளிந்​தி​ருக்​கும் நாடு​கள் கூட ஒலிம்​பிக்​கில் கோப்​பையை வென்ற நாடு​க​ளின் பட்​டிய​லில் ஒளிர்​கி​றது.​ ஆனால் உல​கின் இரண்​டா​வது பெரிய மக்​கள் தொகையை கொண்ட இந்​தி​யா​வின் நிலையோ வெற்​றிப்​பட்​டிய​லில் தேடும் நிலை​யில் தான் இருக்​கி​றது.​

Wednesday, December 9, 2009

!தெலங்கானா தனி மாநிலம்: மத்திய அரசு கொள்கை அளவில் சம்மதம்

தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்​டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்​கொண்டுள்ளது.​
அதன் முதல் கட்ட நட​வ​டிக்​கை​யாக தனி மாநில கோரிக்​கையை வலி​யு​றுத்தி ஆந்​திர சட்​டப்​பே​ர​வை​யில் தீர்​மா​னம் நிறை​வேற்​று​வது என காங்​கி​ரஸ் ​ மேலி​டம் முடிவு செய்​துள்​ளது.​
இத் தக​வலை மத்​திய உள்​துறை அமைச்​சர் ப.​ சிதம்​ப​ரம் தெரி​வித்​தார்.​
தில்​லி​யில் பிர​த​மர் மன்​மோ​கன் சிங் இல்​லத்​தில் புதன்​கி​ழமை இரவு நடந்த நீண்ட ஆலோ​ச​னைக்​குப் பிறகு அவர் செய்​தி​யா​ளர்​க​ளுக்​குப் பேட்​டி​ய​ளித்​தார்.​ அப்​போது இதை தெரி​வித்​தார்.​
இரண்டு சுற்​று​க​ளாக நடந்த ஆலோ​ச​னை​யில் காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்தி,​​ பிர​த​மர் மன்​மோ​கன் சிங்,​​ மூத்த அமைச்​சர்​கள் மற்​றும் ஆந்​திர முதல்​வர் ரோசய்யா ஆகி​யோர் பங்​கேற்​ற​னர்.​
ஆந்​தி​ரத்​தில் பற்றி எரி​யும் தெலங்​கானா நெருப்பை அணைக்​கும் முயற்​சி​யாக காங்​கி​ரஸ் மேலி​டம் இந்த முடிவை எடுத்​துள்​ள​தா​கத் தெரி​கி​றது.​
தனி மாநி​லம் அமைப்​ப​தற்​கான முதல் கட்ட நட​வ​டிக்கை தொடங்​கப்​பட்​டுள்​ளது.​ இது தொடர்​பாக முறை​யான தீர்​மா​னம் சட்​டப்​பே​ர​வை​யில் நிறை​வேற்​றப்​ப​டும் என்று அவர் கூறி​னார்.​
சட்​டப்​பே​ர​வை​யில் தீர்​மா​னம் எப்​போது நிறை​வேற்​றப்​ப​டும் என்ற விவ​ரத்தை அவர் தெரி​விக்க மறுத்​து​விட்​டார்.​
உண்​ணா​வி​ர​தம் இருந்து வரும் சந்​தி​ர​சே​கர ராவின் உடல் நல​னில் மத்​திய அரசு அதிக அக்​கறை கொண்​டுள்​ளது.​ அவர் போராட்​டத்தை உட​ன​டி​யாக கைவிட வேண்​டும் என்று அவர் கேட்​டுக்​கொண்​டார்.​ தெலங்​கானா போராட்​டம் தொடர்​பாக மாண​வர்​கள் மற்​றும் தெலங்​கானா ராஷ்ட்ர சமிதி கட்​சி​யி​னர் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​கள் அனைத்​தை​யும் வாபஸ் பெறு​மாறு மாநில முதல்​வர் ரோசய்​யா​வி​டம் அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ளது என்​றார் சிதம்​ப​ரம்.​
மாண​வர்​க​ளும் போராட்​டத்தை உட​ன​டி​யாக கைவிட வேண்​டும் என்று அவர் கேட்​டுக்​கொண்​டார்.​
முன்​ன​தாக​ சந்​தி​ர​சே​கர ராவின் உடல் நிலை குறித்து மக்​க​ளவை மற்​றும் மாநி​லங்​க​ள​வை​யில் உறுப்​பி​னர்​கள் கவலை தெரி​வித்​த​னர்.​ உண்​ணா​வி​ர​தப் போராட்​டத்​தைக் கைவிட வேண்​டும் என்று மக்​க​ள​வைத் தலை​வர் மீரா குமார் மற்​றும் எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் வேண்​டு​கோள் விடுத்​த​னர்.​
தெலங்​கானா பிரச்​னை​யில் மத்​திய அரசு உட​ன​டி​யாக தலை​யிட்டு தீர்​வு​காண வேண்​டும் என்று கோரி மாநி​லங்​க​ள​வை​யில் உறுப்​பி​னர்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​ இத​னால் கடும் அமளி ஏற்​பட்டு அவை ஒத்​தி​வைக்​கப்​பட்​டது.​ சந்​தி​ர​சே​கர ராவுக்கு ஏதா​வது நேர்ந்​தால் அதற்கு மத்​திய அரசே பொறுப்பு என்று பாஜக குற்​றம்​சாட்​டி​யது.​
தெலங்​கானா பகுதி எம்.பி.க்கள்,​​ காங்​கி​ரஸ் மூத்த தலை​வர்​கள் ஆகி​யோ​ரும் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்கை சந்​தித்து நிலை​மை​யின் தீவி​ரத்தை எடுத்​துக் கூறி​னர்.​ தெலங்​கானா போராட்​டம் ஆந்​தி​ரத்​தில் சட்​டம்,​​ ஒழுங்கு பிரச்​னை​யாக மாறி உள்​ளது.​ எனவே உட​ன​டி​யாக தீர்வு காண வேண்​டும் என்று அவர்​கள் கேட்​டுக்​கொண்​ட​னர்.​ சந்​தி​ர​சே​கர ராவின் உடல் நிலை குறித்து அவர்​க​ளி​டம் கேட்​டுத் தெரிந்து கொண்​டார் பிர​த​மர்.​
மத்​திய அர​சின் முடிவை அடுத்து தெலங்​கானா தனி மாநி​லம் தொடர்​பான அனைத்து போராட்​டங்​க​ளும் கைவி​டப்​ப​டும் என்று தெரி​கி​றது.

உண்​ணா​வி​ர​தம் வாபஸ்

மத்​திய அர​சின் அறி​விப்பை அடுத்து கடந்த 11 நாள்​க​ளாக மேற்​கொண்டு வந்த உண்​ணா​வி​ரத போராட்​டத்தை சந்​தி​ர​சே​கர ராவ் புதன்​கி​ழமை நள்​ளி​ரவு கைவிட்​டார்.​ இதை​ய​டுத்து கடந்த 11 நாள்​க​ளாக ஆந்​தி​ரத்தை உலுக்​கிய போராட்​டமும் முடி​வுக்கு வந்​துள்​ளது.​

தொண்​டர்​கள் மகிழ்ச்சி

தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை மத்​திய அரசு ஏற்​றுக்​கொண்​டதை அடுத்து தெலங்​கானா ராஷ்ட்ர சமிதி தொண்​டர்​கள் ஆடி,​​ பாடி மகிழ்ச்சி தெரி​வித்​த​னர்.​ தெலங்​கானா பிராந்​தி​யத்​தில் பட்​டாசு வெடித்து மகிழ்ச்​சி​யைக் கொண்​டா​டி​னர்.​ காங்​கி​ரஸ் கட்​சி​யின் முடிவை தெலங்​கானா ராஷ்ட்ர சமிதி தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவி​டம் தெரி​விப்​ப​தற்​காக தில்​லியி​லி​ருந்து புதன்​கி​ழமை இரவே ஆந்​திர முதல்​வர் ரோசய்யா ஹைத​ரா​பாத் திரும்​பி​னார்.​நீண்ட நாள்​க​ளாக உள்ள தெலங்​கானா தனி மாநில கோரிக்கை நிறை​வேற சந்​தி​ர​சே​கர ராவின் உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் அடிப்​ப​டை​யாக அமைந்​தது குறிப்​பி​டத்​தக்​கது.

"இது போதாது"

சட்​டப்​பே​ர​வை​யில் தீர்​மா​னம் நிறை​வேற்​றி​னால் மட்​டும் போதாது.​ தனி மாநி​லத்​துக்​கான மசோதா நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்​றப்​பட வேண்​டும் என்று தெலங்​கானா ராஷ்ட்ர சமிதி தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவின் மகன் கே.டி.​ ராமா​ராவ் கூறி​னார்.

Wednesday, December 2, 2009

புதிய விக்கிரமாதித்தன், வேதாளமும் பழைய காதையும்

தனது அதிகாரத்தை ஏற்காமல், விடுதலைக்காகப் போராடிய தனது நாட்டு மக்களையே துரத்தியடித்து அழித்து, அதனையே ஒரு மாபெரும் வெற்றியாக கொண்டாடிய வேதாளம், இலங்கை ஆரண்யத்தில் தனது காட்டாட்சியை நீட்டித்துக் கொள்ள தேர்தலை எதிர்நோக்கியிருந்த நிலையில், தனக்கு கீழிருந்த பிசாசே தன்னை எதிர்த்து நிற்க முடிவெடுத்ததால் ஆடிப்போயுள்ள வேளையில், அதற்கு ஆதரவாக விக்கிரமாதித்தன் களமிறங்கியுள்ளது கொழும்புக் கதையில் ஒரு சுவராஸ்யமான திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை வெளியான நெம்பர் ஒன் தேசிய நாளிதழில் விக்கிரமாதித்தன் எழுதிய தலையங்கக் கதையை விவரம் அறியாதவர் யார் படித்தாலும், விக்கிரமாதித்தனின் 'அக்கறை' புரியாமல் குழம்பியிருப்பார்கள். அப்படிக் குழம்பியிருப்போரை தெளிவுபடுத்துவது விக்கிரமாதித்தனை நன்கு அறிந்த நமது கடமையல்லவா?

வேதாளம் எழுப்பிய எத்தனையோ கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த விக்கிரமாதித்தனைப் பற்றி, அதுவும் அவன் எழுதியுள்ள தலையங்கத்தைப் பற்றி, சில கேள்விகள் எழுப்பாமல் விட்டால், புரியாத கதை படித்த குறை ஏற்படும் அல்லவா?

இலங்கை ஆரண்யத்தை தொடர்ந்து ஆள முடிவு செய்த வேதாளத்தை எதிர்த்து, அதனோடு இணைந்து தமிழர்களை பங்கு போட்டுச் சாகடித்த பிசாசு, தேர்தலில் நிற்பது என்றால், அதுவும் அதற்கு மற்ற எதிர்க்கட்சிக் காட்டேரிகள் ஆதரவு தெரிவிப்பது என்றால் என்ன அர்த்தம்? அப்பட்டமான சந்தர்ப்பாவாதமல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விக்கிரமாதித்தன்!

அந்த அளவோடு விக்கிரமாதித்தன் நின்றுவிடவில்லை. தனது சிங்களப் பெளத்த பேரினவாதப் பிடியில் இருந்து விடுதலைப் பெற போராடிய தனது நாட்டு மக்களை, அக்கம்பக்கத்து ஆரண்யங்களில் இருந்து ஆயுதங்களைப் பெற்று, கண்மூடித்தனமாக வேதாளம் அழித்தபோது, அதன் கட்டளையை ஏற்றுக் கொன்று குவித்த பிசாசு என்ன பேசியது என்பதை விக்கிரமாதித்தான் இப்போது நினைவுப்படுத்தி காட்டுகிறார்.

“இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியதே என்று நான் ஆழமாக நம்புகிறேன், தமிழர்கள் தாங்கள் சிறுபான்மையினர் என்பதை உணர்ந்து எங்களோடு வாழலாம். ஆனால் சிறுபான்மை என்ற காரணத்தைக் காட்டி தங்களுக்கு உரிமையற்ற எதையும் கேட்கக்கூடாது” என்று இன அழிப்பு உச்சக்கட்டத்தில் நடந்தபோது பிசாசு பேசியதைச் சுட்டிக்காட்டி, இப்படி தனது சிங்கள இன வெறியை அம்பலப்படுத்திய பிசாசு, இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறது என்று அங்கலாய்க்கிறார் விக்கிரமாதித்தன்.

என்னே விநோதம்! அன்றைக்கு ஏன் இந்த இனவெறி பேச்சைக் கண்டித்து விக்கிரமாதித்தன் தலையங்கம் தீட்டவில்லை என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படி உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் விக்கிரமாதித்தனை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று அன்று அந்த பிசாசு கூறிய மற்றோன்றையும் விக்கிரமாதித்தன் நினைவுப்படுத்திக்காட்டுகிறார். தனது கதைகளைப் படிக்கும் வாசகர்கள் மறந்திருப்பார்கள் அல்லவா? நினைவுப்படுத்த வேண்டாமா? “தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஜோக்கர்கள்” என்று பிசாசு கூறியதையும் சுட்டிக் காட்டுகிறார். அதற்காகத் தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவர்களே கூட பெரிதாக கோபித்துக் கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டாத விக்கிரமாதித்தன், இவ்வாறு கூறி வேதாள அரசிற்கு ஒரு இராஜரீதியான சங்கடத்தை ஏற்படுத்தினார் என்று கசிந்துருகுகிறார் இப்போது.

அதுமட்டுமல்ல, சுதந்திரப் வேங்கைகளை முழுமையாக வீழத்தி வெற்றிகண்டுள்ள நிலையில், 75 விழுக்காடு சிங்களவர்களுக்கும், மீதமுள்ள தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நிலையற்ற உறவை, அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி ஆகிய அடிப்படைகளில் மறுவரையறை செய்ய வேண்டிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிசாசு தனக்கு எதிராக களத்தில் குதித்திருப்பதால் வேதாளம் சற்றும் மனந்தளரவில்லை என்று அதன் பெருமையைக் கூறி புளங்காகிதம் அடைகிறார் விக்கிரமாதித்தன்.

தனது பதவிக் காலம் இன்னுமும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையிலும், எதற்காகத் தேர்தலை உடனே நடத்த வேதாளம் முன்வந்துள்ளது தெரியுமா? வடக்கில் வாழும் மக்களுக்கு வேங்கைகளால் பறிக்கப்பட்ட வாக்குச் சுதந்திரத்தை மீண்டும் அளிப்பதற்குத்தானாம்! யே..அப்பா, எவ்வளவு பெரிய தியாகத்தை செய்கிறது வேதாளம்! மெய் சிலிர்க்க வைக்கிறார் விக்கிரமாதித்தன். வடக்கில் வாழும் மக்கள் வாக்குச் சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமே என்பதற்காகவே தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடத்துகிறதாம் வேதாளம். ஆஹா..ஆஹா...வேதாளத்தின் கருணையே கருணை.

வடக்கில் வாழும் மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் குண்டுகள் வீசப்பட்டதா? பீரங்கியால் சுட்டால் மட்டும் போதாது என்பதற்காக, விமானங்களில் இருந்தும் குண்டுகள் பொழிப்பட்டதா? வன்னியில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை அவர்களை துரத்தித் துரத்திக் கொன்றது வாக்குரிமை அளிக்கத்தானா? ‘எல்லாம் முடிந்த’ப் பிறகும் அவர்களை வன்னி முகாம்களில் சோறு தண்ணிக் காட்டாமல் முள்வேலிகளுக்குள் முடக்கி வைத்ததும், இன்னமும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரை அடைத்து வைத்திருப்பதும் வாக்குரிமை சுதந்திரத்திற்குத்தானா? அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் சிங்களர்களை குடியேற்றம் செய்வது கூட, வடக்கு மக்களுக்கு வாக்குரிமை வழங்கத்தானா? அடேயப்பா... இவ்வளவு விவரங்களையும் இத்தனை நாள் விக்கரமாதித்தன் தெரிவிக்காமல் மறைத்துதான் ஏனோ? இது புரியாமல் தமிழர்களும், உலக நாடுகளும் என்னவெல்லாம் பேசிவருகின்றன... சே!

வேதாளத்தின் நோக்கமென்ன? அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி! சொல்கிறார் விக்கிரமாதித்தன். இதெல்லாம் தான் எடுத்த பேட்டியில் வேதாளம் சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள், அதெல்லாம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் கேட்கப்படாமலோ அல்லது சொல்லப்படாமலோ விடப்பட்டிருக்கலாம். வேதாளத்தின் நோக்கம் சமத்துவமே! நம்புங்கள், ஏனென்றால் இப்படிப்பட்ட கதைகளை அந்த வாசகர்கள் நம்புவதால்தானே அது நெம்பர் ஒன் தேசிய நாளிதழாக திகழ்கிறது!

அது சரி, அடுத்தக் காட்டு அரசியல் விவகாரத்தில் விக்கிரமாதித்தனுக்கு என்ன இவ்வளவு அக்கரை என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு கேள்வி எழலாம், ஆனால் விடை அவ்வளவு சாதாரணமானதல்ல. இதில் மிகப் பெரிய பன்னாட்டு அரசியல் அடங்கியுள்ளது, இல்லையென்றால், விக்கிரமாதித்தன் கூந்தல் இந்த அளவிற்கு ஆடுமா?

இலங்கை ஆரண்யத்தை, அதன் ஆட்சியை தனது பிடிக்குள் கொண்டுவந்துள்ளது பரத நாட்டின் வடக்கே ஆட்சி செய்யும் சிகப்புச் சாத்தான். அதில் விக்கிரமாதித்தன் உபகாரம் மிகவும் அதிகம். இலங்கை ஆரண்யத்தை சிகப்புச் சாத்தான் பிடியில் இருந்து தனது பிடிக்குள் கொண்டு வர உலகப் பெரும் ராட்ஷசன் முயன்று வருகிறது. அதன் ஆதரவு பெற்ற குட்டி அரசியல் காட்டேரிகளின் ஆதரவுடன்தான் பிசாசு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பரத நாட்டின் நிலை என்ன என்பதில் வேதாளத்திற்குச் சந்தேகம். அதனைத் தீர்க்கத்தான் பரத நாட்டு அமைச்சனின் இலங்கை ஆரண்ய விஜயம் நடந்தது. இருந்தாலும் சந்தேகம் தீரவில்லை, காரணம்: ராட்ஷசன் பரதநாடுடன் கொண்டுள்ள ஸ்ட்ராஜிக் ரிலேசன்ஷிப்.

இந்தச் சூழலில், பிசாசு வெற்றி பெற்றால் இலங்கை ஆரண்யம் ராட்ஷசன் கைக்குப் போய்விடுமே என்பதுதான் விக்கிரமாத்தித்தனின் கவலை. கடந்த பல ஆண்டுகளாக கொழும்பு ஆரண்யத்திற்குச் சென்று வேதாளத்தை அடிக்கடி சந்தித்ததால் ஏற்பட்ட நல்லுறவு எங்கே பயன்றறுப் போய்விடுமோ என்ற விசனம் விக்கிரமாதித்தனுக்கு. அதனால் விளைந்த எழுத்தோவியம்தான் இன்று காலையில் நாம் படித்தது. இதில் மக்கள் நலனோ அல்லது உலக நலனோ உள்ளது என்று யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது.