Sunday, February 21, 2010

நடக்கப்போவது என்ன? பென்னாகரம் தொகுதியில் சுறுசுறுப்பு

பென்னாகரம் இடைத்தேர்தல் தேதி ஏற்கனவே ஒரு முறை அறிவித்தபோதே, தி.மு.க., - பா.ம.க.,வினர், முழு வீச்சில் தேர்தல் பணியை துவங்கி விட்டனர். இடையில், லேசான தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், மார்ச் 27ம் தேதி பென்னாகரம் இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் தேர்தல் பணிகளில் பா.ம.க., - தி.மு.க.,வினர் தீவிரம் காட்ட துவங்கி விட்டனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், தர்மபுரியில் கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேர்தல் பணி குறித்தும், வரும் நாட்களில் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு போலீசில் முன் அனுமதி பெறுவது குறித்தும் அந்தந்த பகுதி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையடுத்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, பணிகளை கவனிக்கத் துவங்கி விட்டனர். அதேபோல, சென்னை பொதுக்குழுவுக்கு சென்று திரும்பிய தி.மு.க.,வினரும், முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.தேர்தல் அறிவித்து, ஒத்தி வைக்கப்பட்ட கால அவகாசத்தில், பல்வேறு பின்தங்கிய கிராமங்களில் சாலை, பஸ், குடிநீர் வசதியை, ஆளுங்கட்சியினர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி செய்து கொடுத்துள்ளனர். பா.ம.க.,வினர் தங்களது ஜாதிப் பின்னணியை பயன்படுத்தி, கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்தனர்.இதனால், பென்னாகரம் தொகுதியில், தி.மு.க., - பா.ம.க., மட்டுமே மோதுவது போன்ற ஒரு தோற்றம், வாக்காளர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகளின் நிலை மோசமாக உள்ளது. சுவர் விளம்பரங்கள் எழுதக்கூட அவர்களுக்கு இடமில்லாத அளவுக்கு, தி.மு.க.,வும், பா.ம.க.,வும் ஆக்கிரமித்து விட்டன; இரவு, பகலாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன.

குழப்பம்: அ.தி.மு.க., சார்பில், தர்மபுரி மாவட்ட செயலர் தாளப்பள்ளம் அன்பழகன் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. தே.மு.தி.க.,வில் டாக்டர் செந்தில் உள்ளிட்ட ஐந்து பேர், கட்சித் தலைமையிடம் "சீட்' கேட்டுள்ளனர். தலைமையின் முடிவு தெளிவில்லாமல் இருப்பதால், அக்கட்சியினரும் குழப்பத்தில் உள்ளனர்.அ.தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் சார்பில், விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விடுவர் என்று கூறப்படுகிறது. அந்த அறிவிப்பும் வந்தால், தேர்தல் களம் மேலும் விறுவிறுப்படையும்.

சமீபத்தில் டில்லி சென்று திரும்பிய ஜெயலலிதா, "பென்னாகரம் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடும்' என அறிவித்தார். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் 43 ஆயிரம் வாக்காளர்கள் விடுபட்டிருப்பதாக புகார் தெரிவித்த நிலையில், தேர்தல் தேதியை மே மாதம் வரையில் தள்ளிப் போட வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க., எண்ணியது. இந்நிலையில் திடீர் தேர்தல் அறிவிப்பு, அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் இறங்கியிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்ட போதும், இவ்விரு கட்சியும் வேட்பாளர் தேர்வு பற்றி அதிக பரபரப்பு காட்டாதது, கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற கட்சியினரும், அ.தி.மு.க.,வின் தேர்தல் வியூகத்தை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாற்றத்தில் உள்ளனர்.

எது எப்படியிருந்தாலும் நடக்கப்போவதை நாடறியும்!!!

4 comments:

சகாதேவன் said...

எம்.எல்.ஏ தன் பதவிக்காலத்தில் ராஜினாமா செய்தாலோ, இறந்துபோனாலோ இனி இடைத்தேர்தலே நடத்தக் கூடாது. பொதுத்தேர்தலில் அந்த தொகுதியில் ரெண்டாவதாக அதிக பட்ச ஓட்டு வாங்கிய வேட்பாளரை, அவர் எந்த கட்சியானாலும், எம்.எல்.ஏ ஆக்கி விட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் தரும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். அரசுக்கு எவ்வளவு காசு மிச்சம்.

ஐந்திணை said...

Super idea Saga!!

சங்கே முழங்கு said...

நன்றி சகாதேவன்....

Subu said...

பென்னாகரம் தேர்தல் முடிவுகள்

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html

Post a Comment