Tuesday, June 2, 2009

இலங்கை முகாமில் தொலைந்த இளைஞர் இளைஞிகள்!

பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடைத் தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மே 30ஆம் தேதி கணக்குப்படி 2,76,785 பேர் என்றும், இது கடந்த 27ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கோடு ஒப்புடுகையில் 13,130 பேர் குறைவாக உள்ளனர் என்றும் ஐ.நா.அறிக்கை கூறியது.

மேலும் இரட்டை கூட்டலினால் இத்தவறு நேர்திருக்கலாம் என்றும், மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்றும் வெளியிடப்படாத ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதென தங்களுக்கு கிடைத்த ‘உள் தகவல்’ அடிப்படையில் இன்னர் சிட்டி பிரஸ் பத்திரிக்கை எழுதியுள்ளது.

ஆனால் இராணுவத்தின் முகாம்களுக்கு வந்தோரை கணக்கீடு செய்து பதிவு செய்த முறை நேர்த்தியானது என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆணையர் அலுவலகம் தெரிவித்திருந்ததையும் இன்னர் சிட்டி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

முகாம்களில் உள்ள இளைஞர்களை துணை இராணுவப் படையினர் அங்கிருந்து அகற்றி கொண்டு செல்வதாகவும், இளம் பெண்களை பிரித்து பாலியல் ரீதியாக பயன்படுத்த கடத்திச் செல்வதாகவும் ஐயமேற்படுகின்றது.

இந்தப் பின்னணியில்தான், இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்ய முடியாத நிலையில், அங்கு பன்னாட்டு புலனாய்வு நடத்த வேண்டும் என்று பான் கீ மூன் சொல்லியுள்ளார்.

பன்னாட்டு புலனாய்வு அவசியம் என்று கூறிய பான் கீ மூன், அது சாத்தியமல்ல என்று மறைமுகமாக கூறுவதுபோல சொல்லியுள்ளார் : “பன்னாட்டு சமூகத்தின் மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்றால் அதற்கு முதலில் அந்நாட்டு அரசின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்; இரண்டாவதாக, அதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவு வேண்டும்” என்று.

அதில் ஐ.நா.வில் உள்ள 5 நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இரஷ்யா ஆகியவற்றின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
இந்த 5 வல்லரசுகளி்ல் சீனாவும், இரஷ்யாவும் (இந்தியாவைப் போல) தமிழர்களுக்கு எதிரான இந்தப் போருக்கு ஆதரவும் ஆயுதங்களும் வழங்கியவை. அதனால்தான், இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து ஒரு விவாதத்தை இன்று வரை பாதுகாப்புப் பேரவையில் நடத்த முடியாமல் தடுத்து வருகின்றன இரஷ்யாவும், சீனாவும்.

இன்னும் கொடுமை என்னவென்றால் இப்போதும் கூட கொழும்புவில் உள்ள ஐ.நா. தூதரத்திடம் அங்குக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை வெளியிடவில்லை!

தமிழராய் நாம் என்ன செய்யப்பொகிறோம்? :-(

No comments:

Post a Comment