Thursday, July 9, 2009

ஆடு நனையுதென்று ஓ(நாய்) வேதனை!

அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு மீண்டும் ஏன் சாதி சங்கமாக குறுக வேண்டும் எ‌ன்று பா.ம.க ‌நிலை கு‌றி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் வேதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி எழுந்து,நேற்று நடந்த விவாதம் குறித்து குறிப்பிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் பற்றி எதிர் கருத்துக்களை கூறினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ம.க உறுப்பினர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை பார்த்து பேச அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது அவை‌த் தலைவ‌ர், ஜி.கே.மணி காங்கிரஸ் உறுப்பினர்களை பற்றி கூறிய கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டார். தான் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினால் நேற்று சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று ஜி.கே.மணி கூறினார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் அ‌ல்போ‌ன்‌ஸ், சுதர்சனம் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கூடாது என்று கூறினார். அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, நேற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறியது ஜி.கே.மணியின் கருத்துக்கு மறுப்பு. இன்று ஜி.கே.மணி சொல்வது பிரச்சனையை உருவாக்கும் செயல். எனவே காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டியது இல்லை என்றார்.

இதையடுத்து ஜி.கே.மணி நேற்று முதலமைச்சர் குறிப்பிட்டது போல அவர் விரும்புகிற நாளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனை பற்றி விவாதம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

அ‌ப்போது முதலமைச்சர் கருணாநிதி குறு‌க்‌கி‌ட்டு பேசுகை‌யி‌‌ல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சர் என்று ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார். ஒரு விவாதத்தை வைத்துக்கொள்ள தேதி சொல்லவேண்டும் என்றும் குறிப்பிட்டார். தி.மு.க. ஆட்சி வன்னியர்களுக்கு துரோகம் செய்வது போல ஒரு கற்பனை குற்றச்சா‌ற்றை கூறி அதுபற்றிய படிவங்களை அச்சிட்டு வெளியே வினியோகம் செய்து இருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் மிகவும் பிற்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உரிய இடத்தை எந்த அளவு வழங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்னிய சமுதாயத்தில் அதிகமாக இல்லை என்று கூறினார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான தேர்வை மத்திய தேர்வாணையம் நடத்துகிறது. இதுபோல உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதும் தமிழக அரசுக்கு எந்த பொறுப்பும் இல்லை.

மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர்களை பொறுத்தவரை தற்போது வன்னியர்கள் இர‌ண்டு பே‌ர் இருக்கிறார்கள். ஜெயராமனுக்கு 2-வது முறையாக ஆட்சித்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள் 3 பேர் வன்னியர்கள். அமைச்சர்களில் 3 பேர், துணைவேந்தர்களில் 3 பேர் வன்னியர்கள். தேர்வாணையத்தின் உறுப்பினர் தலைவராக வன்னியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவற்றை எல்லாம் நியமித்து இருக்கிறோமா? இல்லையா?

காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று இங்கு பேசும்போது மிகவும் கவலையுடன் குறிப்பிட்டார்கள். சாதி பற்றி ஒவ்வொருவரும் பேசும் நிலை ஏற்பட்டால் அதுபற்றிய பிரச்சனையை எழுப்பினால் என்ன ஆவது என்றனர். அந்த கவலையை நானும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒன்றை குறிப்பிடுகிறேன். எந்த ஒரு தனிநபருக்கும், குழுவுக்கும் ஒரு கட்சியை உருவாக்க உரிமை உண்டு. அது சாதி கட்சியாக இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. பா.ம.க. முதலில் சாதி சங்கமாக இருந்தது அப்போது எல்லாம் அவர்களுக்கு அரசியல் கட்சிகளை பிடிக்காது. என்னையும், சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இருக்கும் உங்களை போன்ற உறுப்பினர்களையும் ஓட்டு பொறுக்கி என்றுதான் சொல்வார்கள். அரசியலே பிடிக்காத அந்த சாதி சங்கம் பின்னர் அரசியல் கட்சியாக உருவாகியது. அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு மீண்டும் ஏன் சாதி சங்கமாக குறுக வேண்டும் என்பதுதான் எனது வேதனை.

வன்னியர்களுக்கு இந்த கட்சி எதிரானது என்பது போல பொதுமக்களிடம் பிரசாரம் செய்கிறார்கள். 1969ஆம் ஆண்டில் என் தலைவர் அண்ணா மறைந்த போது நான் முதலமைச்சர் ஆனேன். அப்போதே நான் இதே அவையில் பிற்பட்டோர்களுக்கும், மிகவும் பிற்பட்டோர்களுக்கும் தொண்டனாக இருப்பேன் என்று கூறினேன். காரணம் நான் மிக மிக பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவன்.

1999இல் ஆளுநர் உரையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் 108 பிரிவினர் இருப்பதாகவும், அவர்களது இடஒதுக்கீடு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாகவும் கூறப்பட்டது. ஜி.கே.மணி இங்கு பேசும் போது 108 சாதியினருக்கு 20 சதவீதம்தானா என்று பேசினார். இந்த 108 சாதியினரின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? 1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரம் பேர்தான். இதில் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர்.

1957இல் முதன் முதலில் நான் சட்டமன்ற உறுப்பினராக இந்த அவைக்கு நுழைந்தபோது பெருந் தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தார். அப்போது தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்று இருந்த சமூகத்தினரின் பெயர் நாவிதர், மருத்துவர், இசை வேளாளர் என்று பல பெயர்களை குறிப்பிட்டு விட்டு இறுதியில் சானான் என்று போட்டு இருந்தார்கள். உடனே நான் எல்லோருக்கும் “ர்” விகுதியில் பெயர்களை குறிப்பிட்டு விட்டு ஒரு சமூகத்துக்கு மட்டும் ஏன் “ன்” விகுதியை போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்போது அந்த துறைக்கு அமைச்சராக இருந்த கக்கன் திடுக்கிட்டார். ஆனால் அமைச்சர் சி.சுப்பிரமணியன் அதில் தவறு இல்லை என்று வாதிட்டார்.

உடனே பெருந்தலைவர் காமராஜர், கக்கனிடம் ஏதோ சொல்ல அவர் திருத்தப்படும் என்று அறிவித்தார். இதில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது தெரியும்.

டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி போன்றவர்கள் வன்னியர்களை தி.மு.க. அரசு புறக்கணிப்பது போல கூறுகிறார்கள். மொத்தம் உள்ள பிற்பட்டோரில் வன்னியர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர். சேர்வை போன்ற சமூகத்தினர் 11 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர். மற்ற பிரிவினர் 41 லட்சத்து 81 ஆயிரத்து 11 பேர்.

இன்றைக்கு சமூகநீதி பற்றி பேசுகிற டாக்டர் ராமதாஸ் ஒரு திருமண விழாவில் தி.மு.க. வன்னியர்களுக்கு எதிரான கட்சி என்று பிரசாரம் செய்துள்ளார். சமூக நீதி தலைவரான வி.பி.சிங் தமிழ்நாட்டுக்கு வந்தபோது பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் வன்னிய பெண்கள் வீட்டின் வாசலையும், ஜன்னலையும் பூட்டிக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கூறி இருந்தார். அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, சில செயல்களை செய்வதால்தான் இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது எ‌ன்று முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து முதலமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்க ஜி.கே.மணி விரும்பினார். ஆனால் அவை‌த் தலைவ‌ர், முதலமைச்சர் தெளிவாக பதிலளித்த பின்னர் அவை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்துவது போல நின்று கொண்டிருப்பது முறையில்லை என்று கூறி அவரை உட்கார சொன்னார்.

ஆனால் ஜி.கே.மணியும், திருக்கச்சூர் ஆறுமுகமும், பா.ம.க உறுப்பினர்களும் சபையில் நின்று கொண்டே இருந்தனர்.
அப்போது அவை முன்னவர் அன்பழகன் குறுக்கிட்டு, ஒரு பிரச்சனையில் முதலமைச்சர் விளக்கமளித்த பிறகு அதில் விவாதத்திற்கு இடமில்லை. அதில் விவாதம் செய்ய உறுப்பினர்களுக்கு உரிமை கிடையாது.

ஜி.கே.மணி நேற்று எழுப்பிய பிரச்சனைக்கு இன்று முதலமைச்சர் விளக்கமளித்து விட்டார். முதலமைச்சருக்கே கூட அவை‌த் தலைவ‌ர் அனுமதி அளித்தால்தான் பேச முடியும். நேற்றும், இன்றும் இந்த பிரச்சனையை எடுத்துக் கொண்ட பிறகு இன்று மணி மீண்டும் அதனை எழுப்புவதற்கு அவையின் நேரத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. வேறொரு சந்தர்ப்பத்தில் பா.ம.க இந்த பிரச்சனையை எழுப்பலாம், பேசலாம்.

இங்கே ஜி.கே.மணியும் நீண்ட காலம் இருக்க போகிறார். நாங்களும் இருக்கப் போகிறோம். சமூக நீதி என்பது நீண்ட காலம் இருக்கும் பிரச்சனைதான். சமூகம் இருக்கும் வரை சமூக நீதி பிரச்சனையும் இருக்கும். எனவே வேறொரு சந்தரப்பத்தில் நீங்கள் பேசலாம் என்று கூறினார். அத்துடன் இந்த பிரச்சனை முடிவடைந்தது.

1 comment:

ஜோ/Joe said...

ஓ! இதை சொன்னா கலைஞர் ஓநாயா?

Post a Comment