Wednesday, December 9, 2009

!தெலங்கானா தனி மாநிலம்: மத்திய அரசு கொள்கை அளவில் சம்மதம்

தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்​டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்​கொண்டுள்ளது.​
அதன் முதல் கட்ட நட​வ​டிக்​கை​யாக தனி மாநில கோரிக்​கையை வலி​யு​றுத்தி ஆந்​திர சட்​டப்​பே​ர​வை​யில் தீர்​மா​னம் நிறை​வேற்​று​வது என காங்​கி​ரஸ் ​ மேலி​டம் முடிவு செய்​துள்​ளது.​
இத் தக​வலை மத்​திய உள்​துறை அமைச்​சர் ப.​ சிதம்​ப​ரம் தெரி​வித்​தார்.​
தில்​லி​யில் பிர​த​மர் மன்​மோ​கன் சிங் இல்​லத்​தில் புதன்​கி​ழமை இரவு நடந்த நீண்ட ஆலோ​ச​னைக்​குப் பிறகு அவர் செய்​தி​யா​ளர்​க​ளுக்​குப் பேட்​டி​ய​ளித்​தார்.​ அப்​போது இதை தெரி​வித்​தார்.​
இரண்டு சுற்​று​க​ளாக நடந்த ஆலோ​ச​னை​யில் காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்தி,​​ பிர​த​மர் மன்​மோ​கன் சிங்,​​ மூத்த அமைச்​சர்​கள் மற்​றும் ஆந்​திர முதல்​வர் ரோசய்யா ஆகி​யோர் பங்​கேற்​ற​னர்.​
ஆந்​தி​ரத்​தில் பற்றி எரி​யும் தெலங்​கானா நெருப்பை அணைக்​கும் முயற்​சி​யாக காங்​கி​ரஸ் மேலி​டம் இந்த முடிவை எடுத்​துள்​ள​தா​கத் தெரி​கி​றது.​
தனி மாநி​லம் அமைப்​ப​தற்​கான முதல் கட்ட நட​வ​டிக்கை தொடங்​கப்​பட்​டுள்​ளது.​ இது தொடர்​பாக முறை​யான தீர்​மா​னம் சட்​டப்​பே​ர​வை​யில் நிறை​வேற்​றப்​ப​டும் என்று அவர் கூறி​னார்.​
சட்​டப்​பே​ர​வை​யில் தீர்​மா​னம் எப்​போது நிறை​வேற்​றப்​ப​டும் என்ற விவ​ரத்தை அவர் தெரி​விக்க மறுத்​து​விட்​டார்.​
உண்​ணா​வி​ர​தம் இருந்து வரும் சந்​தி​ர​சே​கர ராவின் உடல் நல​னில் மத்​திய அரசு அதிக அக்​கறை கொண்​டுள்​ளது.​ அவர் போராட்​டத்தை உட​ன​டி​யாக கைவிட வேண்​டும் என்று அவர் கேட்​டுக்​கொண்​டார்.​ தெலங்​கானா போராட்​டம் தொடர்​பாக மாண​வர்​கள் மற்​றும் தெலங்​கானா ராஷ்ட்ர சமிதி கட்​சி​யி​னர் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​கள் அனைத்​தை​யும் வாபஸ் பெறு​மாறு மாநில முதல்​வர் ரோசய்​யா​வி​டம் அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ளது என்​றார் சிதம்​ப​ரம்.​
மாண​வர்​க​ளும் போராட்​டத்தை உட​ன​டி​யாக கைவிட வேண்​டும் என்று அவர் கேட்​டுக்​கொண்​டார்.​
முன்​ன​தாக​ சந்​தி​ர​சே​கர ராவின் உடல் நிலை குறித்து மக்​க​ளவை மற்​றும் மாநி​லங்​க​ள​வை​யில் உறுப்​பி​னர்​கள் கவலை தெரி​வித்​த​னர்.​ உண்​ணா​வி​ர​தப் போராட்​டத்​தைக் கைவிட வேண்​டும் என்று மக்​க​ள​வைத் தலை​வர் மீரா குமார் மற்​றும் எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் வேண்​டு​கோள் விடுத்​த​னர்.​
தெலங்​கானா பிரச்​னை​யில் மத்​திய அரசு உட​ன​டி​யாக தலை​யிட்டு தீர்​வு​காண வேண்​டும் என்று கோரி மாநி​லங்​க​ள​வை​யில் உறுப்​பி​னர்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​ இத​னால் கடும் அமளி ஏற்​பட்டு அவை ஒத்​தி​வைக்​கப்​பட்​டது.​ சந்​தி​ர​சே​கர ராவுக்கு ஏதா​வது நேர்ந்​தால் அதற்கு மத்​திய அரசே பொறுப்பு என்று பாஜக குற்​றம்​சாட்​டி​யது.​
தெலங்​கானா பகுதி எம்.பி.க்கள்,​​ காங்​கி​ரஸ் மூத்த தலை​வர்​கள் ஆகி​யோ​ரும் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்கை சந்​தித்து நிலை​மை​யின் தீவி​ரத்தை எடுத்​துக் கூறி​னர்.​ தெலங்​கானா போராட்​டம் ஆந்​தி​ரத்​தில் சட்​டம்,​​ ஒழுங்கு பிரச்​னை​யாக மாறி உள்​ளது.​ எனவே உட​ன​டி​யாக தீர்வு காண வேண்​டும் என்று அவர்​கள் கேட்​டுக்​கொண்​ட​னர்.​ சந்​தி​ர​சே​கர ராவின் உடல் நிலை குறித்து அவர்​க​ளி​டம் கேட்​டுத் தெரிந்து கொண்​டார் பிர​த​மர்.​
மத்​திய அர​சின் முடிவை அடுத்து தெலங்​கானா தனி மாநி​லம் தொடர்​பான அனைத்து போராட்​டங்​க​ளும் கைவி​டப்​ப​டும் என்று தெரி​கி​றது.

உண்​ணா​வி​ர​தம் வாபஸ்

மத்​திய அர​சின் அறி​விப்பை அடுத்து கடந்த 11 நாள்​க​ளாக மேற்​கொண்டு வந்த உண்​ணா​வி​ரத போராட்​டத்தை சந்​தி​ர​சே​கர ராவ் புதன்​கி​ழமை நள்​ளி​ரவு கைவிட்​டார்.​ இதை​ய​டுத்து கடந்த 11 நாள்​க​ளாக ஆந்​தி​ரத்தை உலுக்​கிய போராட்​டமும் முடி​வுக்கு வந்​துள்​ளது.​

தொண்​டர்​கள் மகிழ்ச்சி

தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை மத்​திய அரசு ஏற்​றுக்​கொண்​டதை அடுத்து தெலங்​கானா ராஷ்ட்ர சமிதி தொண்​டர்​கள் ஆடி,​​ பாடி மகிழ்ச்சி தெரி​வித்​த​னர்.​ தெலங்​கானா பிராந்​தி​யத்​தில் பட்​டாசு வெடித்து மகிழ்ச்​சி​யைக் கொண்​டா​டி​னர்.​ காங்​கி​ரஸ் கட்​சி​யின் முடிவை தெலங்​கானா ராஷ்ட்ர சமிதி தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவி​டம் தெரி​விப்​ப​தற்​காக தில்​லியி​லி​ருந்து புதன்​கி​ழமை இரவே ஆந்​திர முதல்​வர் ரோசய்யா ஹைத​ரா​பாத் திரும்​பி​னார்.​நீண்ட நாள்​க​ளாக உள்ள தெலங்​கானா தனி மாநில கோரிக்கை நிறை​வேற சந்​தி​ர​சே​கர ராவின் உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் அடிப்​ப​டை​யாக அமைந்​தது குறிப்​பி​டத்​தக்​கது.

"இது போதாது"

சட்​டப்​பே​ர​வை​யில் தீர்​மா​னம் நிறை​வேற்​றி​னால் மட்​டும் போதாது.​ தனி மாநி​லத்​துக்​கான மசோதா நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்​றப்​பட வேண்​டும் என்று தெலங்​கானா ராஷ்ட்ர சமிதி தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவின் மகன் கே.டி.​ ராமா​ராவ் கூறி​னார்.

No comments:

Post a Comment